Malayalam Movies: சிங்கமும், புலியுமாக அடித்துக்கொண்டு ஹிட் அடித்த 5 மலையாள படங்கள்.. சலிக்காம எத்தனை வாட்டினாலும் பார்க்கலாம்

Malayalam Movies: இந்திய சினிமா ரசிகர்கள் இடையே இப்போது மலையாள படங்களுக்கு மவுசு அதிகமாகிவிட்டது. மஞ்சுமல் பாய்ஸ் என்னும் ஒரு படம் ரிலீஸ் ஆகி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் மல்லு பக்கம் திருப்பி விட்டது.

அதைத் தொடர்ந்து பிரேமலு படம் மீண்டும் ஒருமுறை மலையாள சினிமாவை தூக்கி நிறுத்திவிட்டது. இதனால் சினிமா ரசிகர்களுக்கு மலையாள படம் பார்ப்பதற்கான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. நல்ல மலையாள படம் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த ஐந்து படங்களை பார்த்து விடுங்கள்.

சலிக்காம எத்தனை வாட்டினாலும் பார்க்கலாம்

ஐயப்பனும் கோசியும்: பிஜு மோன் மற்றும் பிரித்விராஜின் சிறந்த நடிப்பில் வெளியான படம் தான் ஐயப்பனும் கோசியும். இந்த படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்பது கோலிவுட் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது. அட்டப்பட்டி கிராமத்தில் போலீசாக வேலை செய்யும் ஐயப்பன் மற்றும் அந்த கிராமத்திற்கு ஒரு நோக்கத்தோடு உள்ளே வரும் கோசி இருவருக்கும் இடையேயான அழகான பரிமாணங்கள் தான் இந்த படம்.

டிரைவிங் லைசன்ஸ்: பிரித்விராஜ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சூப்பர் ஹிட் படம் தான் டிரைவிங் லைசன்ஸ். சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பிரித்விராஜுக்கு ஒரு படத்தை உடனே முடித்தாக வேண்டிய கட்டாயம். அந்த படப்பிடிப்புக்கு செல்ல தேவைப்படும் அவருடைய டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட அதை தொடர்ந்து இந்த கதை நகரும். படம் முழுக்க எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரசியமாக இருக்கும்.

மலையாங்குஞ்சு: நடிப்பதற்காகவே பிறவி எடுத்து வந்தது போல் நடித்து ரசிகர்களை தன் கைவசம் வைத்திருக்கும் பகத் பாசில் நடித்த படம் தான் மலையான் குஞ்சு. தந்தையின் மரணம், சகோதரியின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட அணி குட்டனின் அன்றாட வாழ்க்கையை எதார்த்தமாக சொன்ன படம் இது. ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் வெறுத்துப் போய் வாழும் அணிக்குட்டன், இக்கட்டான சூழ்நிலையில் மதம் மற்றும் ஜாதியைத் தாண்டி மனிதம் தான் பெரியது என்பதை உணர்ந்து கொள்வது தான் இந்த படத்தின் கதை

ஏலா வீழ பூஞ்சிரா: சவுபின் சாகீர் மற்றும் சுதி கொப்பா இணைந்து நடித்த படம் தான் ஏலா வீழ பூஞ்சிரா. படத்தின் கதை அடுத்தடுத்து சுவாரசியமாகவும் திகில் நிறைந்ததாகவும் இருக்கும்.ஏலா வீழ பூஞ்சிரா கிராமத்தில் நடக்கும் ஒரு பெண்ணின் கொலையை இரண்டு போலீஸ்காரர்கள் கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் மையக்கரு.

குட்டாவும் சிக்சியும்: ராஜீவ் ரவி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் தான் குட்டாவும் சிக்சியும். நகை திருட்டு கொள்ளையர்களை கண்டுபிடிக்க செல்லும் ஐந்து போலீஸ் அதிகாரிகளின் கதை தான் இது. படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.

Next Story

- Advertisement -