சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரஜினியிடம் செய்த சேட்டை.. ஆறுதல் சொல்ல போன சிவகார்த்திகேயனை கழட்டி விட்ட இயக்குனர்

Rajinikanth – Sivakarthikeyan: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஒரு இயக்குனர் மீது நம்பிக்கை வந்து விட்டால் அவரை நம்பி எவ்வளவு பெரிய ரிஸ்க் வேண்டுமானாலும் எடுப்பார். அதே நேரத்தில் அந்த இயக்குனர் மீது அவருக்கு சரியான அபிப்பிராயம் ஏற்படவில்லை என்றால், அவர்களுடன் எந்தக் கூட்டணியும் வைத்துக் கொள்ள மாட்டார். அப்படித்தான் ஒரு இயக்குனர் ரஜினி பட வாய்ப்பை இழந்திருக்கிறார்.

ரஜினி கடந்த சில வருடங்களாகவே இளம் இயக்குனர்களுடன் பணியாற்ற விரும்புகிறார். அந்த வரிசையில் இளமையும், எதார்த்தமான படத்தை இயக்கி வெற்றி பெற்ற இந்த இயக்குனருடனும் பணியாற்ற விரும்பி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் மூலம் ரஜினியின் அறிமுகம் கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்தாமல் கோட்டை விட்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குனர்களின் வரிசையில் இருப்பவர்தான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் அவருடைய யதார்த்தமான காமெடி காட்சிகளின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து விட்டார். ரஜினி இவருடன் படம் பண்ண ஆசைப்பட்டு தான் நேரில் அழைத்து டான் படத்திற்காக பாராட்டினார்.

சிபி சக்ரவர்த்தி இடம் ஆட்டிட்யூட் சரி இல்லாத காரணத்தினால் ரஜினி அவருடன் படம் பண்ணவில்லை. ரஜினி அடுத்து சிபி உடன்  இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை ஒதுக்கி விட்டு நெல்சன் உடன் இணைந்தார். சரி வெற்றி படம் கொடுத்த இயக்குனரை கைவிட்டு விடக்கூடாது என சிவகார்த்திகேயன் அடுத்து இருவரும் இணைந்து படம் பண்ணுவோம் என ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் சொன்ன வார்த்தையை நம்பி சிபி சக்கரவர்த்தி கிட்டத்தட்ட ஒரு வருடம் காத்திருந்தார். ஆனால் சிவா அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆனாரே தவிர சிபி பக்கம் திரும்பவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் காண்டாகி இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என அக்கட தேசம் பறந்துவிட்டார். தற்போது அவருடைய படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இப்போது தெலுங்கில் படம் பண்ண இருக்கிறார். நடிகர் நானி கதாநாயகனாக நடிக்க இருக்கும் அந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். டான் படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்திருப்பதால் கண்டிப்பாக தெலுங்கிலும் சிபிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News