கடைசி 5 படங்களில் ரஜினி குவித்த கோடிகள்.. ஷங்கர் பட கலெக்சனை தூக்கி சாப்பிட வைத்த நெல்சன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்றாலே மாஸ், பாலாபிஷேகம்,கட் அவுட் இவை எதற்குமே பஞ்சமிருக்காது. அந்த வகையில் இவரது படங்கள் வெற்றியோ, தோல்வியோ வசூலில் என்றுமே நம்பர் ஒன் என்றும் சொல்லும் வகையில் இவரது படங்கள் கோடிகளை அசால்ட்டாக வாரிக்கொடுக்கும். இதன் காரணமாகத்தான் 72 வயதிலும் இவரை வைத்து படம் எடுக்க தயரிப்பாளர்கள் லைன் கட்டி நிற்கின்றனர். அந்த வகையில் சூப்பர்ஸ்டாரின் கடைசி 5 படங்கள் செய்த வசூல் சாதனையை தற்போது பார்க்கலாம்.

2.0: எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமான இப்படம் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் உலகளவில் 10000 திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவான இப்படத்தின் மொத்த வசூல் உலகளவில் 655 கோடி வரை வசூலாகி பெரும் சாதனை படைத்தது.

Also Read: 2வது முறையும் அவருடன் பாடும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்.. ஒத்திகை பார்க்கும் பொழுது ஏற்பட்ட சங்கடம்

பேட்ட: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் பலர் நடிப்பில் சென்டிமென்ட் ஆக்க்ஷன் காட்சிகளுடன் வெளியாகி ஹிட்டானது. 160 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும் 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்துக்கு போட்டியாக வெளிவந்த இப்படம் மொத்தம் 240 கோடி வரை உலகளாவிய வசூலை பெற்று தந்தது.

தர்பார்: 2020 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸான இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். வடமாநில காவலராக இப்படத்தில் சூப்பர்ஸ்டார் நடித்து மாஸ் காட்டிய நிலையில், 7000 திரையரங்குகளில் உலகளவில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. 180 கோடி பட்ஜெட்டில் உருவான தர்பார் படம் கலவையான வசூலை பெற்ற நிலையில், 210 கோடி வரை மட்டுமே உலகளவில் வசூல் செய்தது.

Also Read: நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

அண்ணாத்த: 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 180 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 2100 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் உலகளவில் 225 கோடி வசூலை பெற்றது.

ஜெயிலர்: அண்மையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் ரிலீஸான ஒரே நாளில் 96 கோடி வரை இந்திய அளவில் வசூல் செய்த நிலையில், படத்தின் ஒரு வார வசூலாக 375 கோடி வரை வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது. இதனிடையே தற்போது வரை 416 கோடி வரை வசூலாகியுள்ள நிலையில் நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகமாகி 800 கோடி வரை கல்லாக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஒரே நாளில் 3 படங்களில் நடித்து ரஜினி வாங்கிய முதல் சொத்து.. குட்டிச்சுவரில் பாட்டிலும், கையுமாய் நின்ற ரஜினிகாந்த்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்