ஒரே நாளில் 3 படங்களில் நடித்து ரஜினி வாங்கிய முதல் சொத்து.. குட்டிச்சுவரில் பாட்டிலும், கையுமாய் நின்ற ரஜினிகாந்த்

Super Star Rajini: 72 வயதிலும் எனர்ஜி குறையாமல் இளம் நடிகர்களுக்கெல்லாம் டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி இன்றும் சூப்பர் ஸ்டார் ஆகவே ஜொலிக்கிறார். ஆனால் இந்த அளவிற்கு ரஜினி வருவதற்கு ஏகப்பட்ட அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்துள்ளார்.

அதுவும் தன்னுடைய நண்பர்கள் ஏளனமாக சிரித்த பொழுது அவர்களிடம் இட்ட சபதத்திற்காகவே ஒரே நாளில் மூன்று படங்களில் நடித்து முதல் முதலாக தனக்கென ஒரு சொத்தை வாங்கி இருக்கிறார். எப்பொழுதுமே ஜெமினி பிளை ஓவர் அருகில் உள்ள ஜெமினி ஸ்டூடியோவில் நிறைய சூட்டிங் நடக்கும் .

Also Read: சிவகார்த்திகேயனுக்கு ஃபோன் போட்ட ரஜினி.. ஜெயிலர் பிரமோஷனுக்காக இப்படி ஒரு உருட்டா!

ரஜினி அங்கே ஷூட்டிங் முடிந்த பின்னர் பக்கத்தில் உள்ள ஹோட்டலில் மது அருந்துவார். ரஜினி குடிக்காமல் தூங்காத நாட்களே கிடையாது . அப்படி அவர் நெருங்கிய நண்பர்களோடு குடிக்கும்போது இந்த ஜெமினி ஸ்டூடியோ-விற்கு அருகே ஒரு இடம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அப்போது அவருடைய நண்பர்கள் ஏளனமாக சிரித்து இருக்கின்றனர். அந்த கணம், ரஜினி பாட்டிலை உடைத்து சபதம் செய்துள்ளார். நான் அந்த இடத்தை வாங்கிய பின்னர்தான் மதுவை தொடுவேன் என்று சபதம் போட்டார். அன்றிலிருந்து ஒரே நாளில் மூன்று நான்கு படங்களின் நடித்து ஓவர் டிப்ரஷன் ஆனார்.

Also Read: 72 வயதிலும் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைக்கும் முத்துவேல் பாண்டியனின் 5 சாதனைகள்.. ரிலீஸ்க்குள்ள ஹார்ட் அட்டாக் வந்துரும் போல

எல்லாத்துக்கும் காரணம் பணம் சம்பாதிப்பது, அவ்வாறு சம்பாதித்து சென்னை பாம்க்ரோவ் ஹோட்டலில் அருகே “அருணாச்சலா லாட்ஜ்”என்ற ஹோட்டலை சொந்தமாகவே வாங்கினார். இதுதான் ரஜினி வாங்கிய முதல் சொத்து. வாங்கிய பின்னர் அந்த ஹோட்டலில் உள்ள குட்டிச் சுவரில் பாட்டிலுடன் உட்கார்ந்து மது குடித்தாராம்.

எந்த அளவிற்கு ரஜினி சினிமாவில் வளர்ந்தாரோ அதே அளவிற்கு தன்னுடைய மது பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டார். ஒரு வேலை அந்த ஒரு பழக்கம் மட்டும் இல்லை என்றால் இப்போது இருக்கும் உயரத்தை விட யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்திற்கு சென்றிருப்பேன் என சமீபத்தில் ஜெயிலர் பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கூட பேசினார். அது மட்டுமல்ல தன்னுடைய ரசிகர்களிடமும் கையெடுத்து கும்பிட்டு குடிப்பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

Also Read: 1000 கோடிக்கு வடை ரெடி, ஜெயிலரை மொக்க பண்ணும் பிரபலம்.. நீயே டிக்கெட் இல்லாம தெருவுல சுத்த போறது கன்பார்ம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்