வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கதிரை மடக்க புது ட்ரிக்ஸ் பாலோ பண்ணும் ராஜி.. மாமியாரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மருமகள்

Pandian stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பிடிக்காத கணவன் மனைவியாக இல்லற வாழ்க்கையில் நுழைந்தாலும் போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்பதற்கு ஏற்ப ராஜி மற்றும் கதிர் தற்போது மாறிக்கொண்டே வருகிறார்கள். அதாவது எதுக்கெடுத்தாலும் அழுமுஞ்சி மாதிரி அழுது கொண்டே இருந்த ராஜி தற்போது கதிர் மனசை மாற்றுவதற்கு புது டிரிக்ஸ் பாலோ பண்ண ஆரம்பித்து விட்டார்.

அதாவது இதுதான் வாழ்க்கை இதுதான் குடும்பம் என்று மனநிலமைக்கு வந்த ராஜி, இனியும் அழுது கொண்டிருப்பது பிரயோஜனம் இல்லை என்று கதிருடன் ரொமான்ஸ் பண்ணுவதற்கு முயற்சி எடுக்கிறார். அதற்கேற்ற மாதிரி மோதலில் ஆரம்பித்த காதல் காதலில் தான் போய் முடியும் என்று சொல்வார்கள். அந்த வகையில் தற்போது எலியும் பூனையும்மாய் ஒரே வீட்டுக்குள் இருந்து சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.

கண்ணே மணியே என்று கொஞ்சினால் காரியமாகாது, அதிரடியாக களத்தில் இறங்கும் விதமாக ராஜி பேச ஆரம்பித்து விட்டார். வழக்கம் போல் ராஜி மற்றும் கதிர் ரூம்குள் தூங்க வருகிறார்கள். அப்பொழுது கதிர் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதால தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று சொல்கிறார். உடனே ராஜி என்ன கல்யாணம் பண்ணிக்கோ என்று நான் வந்து உன்னிடம் கெஞ்சினேனா அல்லது உங்க அம்மா கிட்ட வந்து கேட்டனா என்று கேட்கிறார்.

Also read: மகனின் இமேஜை டேமேஜ் பண்ணிய விஜயா.. கணவருக்காக மாமியாருக்கு சவுக்கடி கொடுத்த சுருதி

நடந்த கல்யாணம் உனக்கு எப்படி பிடிக்கலையோ அதே மாதிரி எனக்கும் பிடிக்கலை என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை வெளியில் இருந்து கேட்ட மாமியார் கோமதி மற்றவர்களுக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக கதவை தட்டுகிறார். உடனே ராஜி, மாமியாரின் கையைப் பிடித்து ரூம்குள் அழைத்து கதவை சாத்துகிறார். யார் எங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொன்னது என்று மாமியாரிடம் கேட்கிறார்.

உடனே கோமதி நீ சாகப் போறேன்னு சொன்ன அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன் என்று சொல்கிறார். அதற்கு ராஜி இந்த கல்யாணம் பண்ணி தினம் தினம் சாகுவதற்கு ஒரேடியாக செத்தே தொலைந்து இருப்பேன் என்று சொல்லி மாமியாரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். அடுத்து காலையில் ராஜி அந்த ரூமே சுத்தமாக வைக்க முயற்சி எடுக்கிறார். அதற்கு கதிர் ஏன் சட்டையெல்லாம் எதுக்கு எடுத்து வச்சிருக்க என்று கோபப்பட்டு கேட்கிறார்.

உடனே துவைத்து எத்தனை மாசம் ஆகுதோ தெரியல நாத்தம் பிடிச்சு நார்து அதுக்கு தான் சோப்பு போடுவதற்கு எடுத்து வைத்தேன் என்று சொல்கிறார். கதிர் அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை என்று சட்டையை வாங்கிக் கொள்கிறார். அப்படியா அப்ப நான் எதுக்கு ரூம சுத்தமா வச்சுக்கணும் என்று அனைத்தையும் குளறுபடி ஆக்கி போட்டு விடுகிறார். தற்போது இவர்களுடைய சண்டை போகபோக இரண்டு பேரும் மனதிற்குள் காதலாக மாறப் போகிறது.

Also read: மனோஜை தன் பக்கம் இழுக்க ரோகிணி செய்த தில்லாலங்கடி வேலை.. மீனாவுக்கு எதிராக பிளான் பண்ணும் விஜயா

- Advertisement -

Trending News