புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மூட்ட முடிச்சோடு அக்கட தேசத்தில் செட்டில் ஆன மாஸ் நடிகர்.. விடாமல் கட்டிப்போட்டிருக்கும் ராஜமௌலி

Rajamouli : நல்ல கலைஞனுக்கு உள்ளூரில் மரியாதை இருக்காது என்று சொல்லுவார்கள். அந்த கதையாய் தான் இருக்கிறது இந்த நடிகரின் சினிமா பயணம். தமிழ் சினிமாவில் இவருடைய நடிப்பு திறமையை கண்டுகொள்ளாமல் சின்ன சின்ன கேரக்டர் மட்டுமே கொடுத்து வந்தார்கள். இப்போது அவர் மொத்தமாய் அக்கடதேசத்திற்கே சென்றுவிட்டார். அங்கு இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு போன்ற படங்களை இயக்கி, இயக்குனராக அறிமுகமான சமுத்திரகனி தான் அந்த நடிகர். இயக்குனர் சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தில் இவர் நடித்த கனகு கேரக்டர் அதிக கவனத்தைப் பெற்றது. அதன் பின்னர் வேலையில்லா பட்டதாரி படத்தில் இவர் தனுஷுக்கு அப்பாவாக நடித்தது நல்ல ரீச் கொடுத்தது.

Also Read:பரபரப்பை ஏற்படுத்திய சாய் பல்லவியின் திருமண புகைப்படம்.. கடும் கோபத்தில் வெளியிட்ட பதிவு

அப்பா மற்றும் ஆண் தேவதை போன்ற படங்களில் சமுத்திரக்கனி தன்னுடைய நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால். இருந்தாலும் பெரும்பாலும் இவருக்கு தமிழில் சின்ன சின்ன நூல்கள் தான் கிடைத்து வந்தது. அப்படி இருக்கும் பொழுது தெலுங்கு சினிமா இவருடைய நடிப்பை அடையாளம் கண்டு கொண்டு, அடுத்தடுத்து வாய்ப்புகளை வாரி வழங்கி இருக்கிறது.

ஆரம்ப காலங்களில் அவ்வப்போது மலையாள படங்களில் நடித்து வந்த இவர் சம்போ சிவ சம்போ என்னும் தெலுங்கு படத்தில் கேமியோ ரோல் செய்திருந்தார். அதன் பின்னர் அல்லு அர்ஜுன் நடித்த அலவைகுந்தபுரம் படம் தெலுங்கு சினிமாவில் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்ததோடு பல விருதுகளையும் வாரி கொடுத்தது. அதன் பின்னர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

Also Read:சஞ்சய் தத் கழுத்தை ஆக்ரோஷமாக பிடித்த விஜய்.. டெவிலை சந்தித்த லியோ போஸ்டர்

இந்திய சினிமாவை ஆஸ்கார் மேடை வரை கொண்டு சென்ற ஆர்ஆர்ஆர் படத்திலும் சமுத்திரகனி முக்கியமான கேரக்டரில் நடித்து இருந்தார். பாகுபலி இயக்குனர் ராஜமௌலி சமுத்திரகனி நடிப்பு திறமையை அடையாளம் கண்டு இப்போது அவரை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துவிட்டார். அடுத்தடுத்து இவருடைய படங்களில் சமுத்திரக்கனியை ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்.

இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரகனியின் சினிமா பயணம் என்பது கோலிவுட்டை நோக்கியே ஆரம்பித்து இருந்தாலும் இப்போது அவர் கொடி கட்டி பறப்பது என்னவோ டோலிவுட் சினிமாவில் தான் அதிலும் ராஜமவுலி போன்ற ஒரு இயக்குனர் அவருடைய படங்களில் இவருக்கு முக்கியமான கேரக்டர்கள் கொடுப்பது தமிழ் சினிமாவுக்கு பெருமையான விஷயம்.

Also Read:லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

- Advertisement -

Trending News