ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

Actress Trisha: நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா இப்போது படு பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். அடுத்தடுத்து அவருடைய படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதில் லியோ மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளிவந்துள்ள தி ரோடு ட்ரெய்லர் பெரும் ஆர்வத்தை உருவாக்கி இருக்கிறது.

அருண் வசீகரன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அப்படி பார்த்தால் லியோவுக்கு முன்பே திரிஷா மாஸ் காட்ட இருக்கிறார்.

Also read: விஜய்க்கு பாய் சொல்லிட்டு திருமணத்திற்கு ஓகே சொன்ன திரிஷா.. அக்கட தேசத்தில் இருந்து வரும் புது மாப்பிள்ளை

அதன்படி ட்ரெய்லரின் ஆரம்பமே படு மிரட்டலாக தான் இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கிறது.

அதை கண்டுபிடிக்க வரும் திரிஷா கதையின் நாயகியாக மிரள வைத்திருக்கிறார். பதைபதைக்க வைக்கும் காட்சிகள், மிரட்டும் பின்னணி இசை என ஒவ்வொன்றையும் பார்க்கும் போது கொஞ்சம் மிரட்சியாக தான் இருக்கிறது.

Also read: சஞ்சய் தத் கழுத்தை ஆக்ரோஷமாக பிடித்த விஜய்.. டெவிலை சந்தித்த லியோ போஸ்டர்

அதிலும் திரிஷா வெறித்தனத்தோடு சண்டையிடும் காட்சிகளும் வேற லெவலில் இருக்கிறது. அந்த வகையில் ட்ரெய்லரிலேயே மொத்த ஆடியன்ஸையும் கவர்ந்துள்ள தி ரோடு மூலம் இளவரசி குந்தவை லேடி சூப்பர் ஸ்டாரை பின்னுக்கு தள்ளி விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Trending News