சஞ்சய் தத் கழுத்தை ஆக்ரோஷமாக பிடித்த விஜய்.. டெவிலை சந்தித்த லியோ போஸ்டர்

Actor Vijay: இப்போது ஒட்டு மொத்த மீடியாவின் கண்ட்ரோலும் லியோ பக்கம் தான் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு மாஸ் காட்டி இருந்த படகுழு தற்போது பாலிவுட்டை மொத்தமாக காலி செய்யும் அளவுக்கு ஒரு சம்பவத்தை செய்துள்ளது.

அதாவது தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு வந்த தயாரிப்பு தரப்பு இன்று ஹிந்தி திரையுலகை குறி வைத்துள்ளது. அதன்படி தற்போது விஜய், சஞ்சய் தத் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் படியான ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Also read: லோகேஷ், லியோவுக்கே கண்டிஷன் போடும் அனிருத்.. பேராசையால் ஆடும் ஆட்டம்

அதிலும் விஜய், சஞ்சய் தத் கழுத்தை வெறிகொண்டு பிடித்திருக்கிறார். இதை பார்க்கும் போது நிச்சயம் லியோ வேற லெவல் சம்பவம் செய்யும் என்று தெரிகிறது. மேலும் கடந்த போஸ்டர்கள் அனைத்தும் விஜய் மட்டுமே இருப்பது போன்று வெளியானது.

ஆனால் இந்த முறை சஞ்சய் தத்தும் இடம் பெற்றிருப்பது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது பாலிவுட்டையும் கொஞ்சம் மிரட்டி தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த போஸ்டரில் அமைதியாக இருங்கள் மற்றும் பிசாசை எதிர்கொள்ளுங்கள் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

Also read: விஜய்க்கு பாய் சொல்லிட்டு திருமணத்திற்கு ஓகே சொன்ன திரிஷா.. அக்கட தேசத்தில் இருந்து வரும் புது மாப்பிள்ளை

அந்த வகையில் ஒட்டுமொத்த நடிகர்கள் பட்டாளத்தையும் வளைத்து போட்டுள்ள லோகேஷ் இன்னும் என்னென்ன ஆச்சரியத்தை கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை. ஆக மொத்தம் லியோ திருவிழா இப்போதே களைக்கட்ட ஆரம்பித்துவிட்டது.

டெவிலை சந்தித்த லியோ போஸ்டர்

leo-[oster
leo-[oster