ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பரபரப்பை ஏற்படுத்திய சாய் பல்லவியின் திருமண புகைப்படம்.. கடும் கோபத்தில் வெளியிட்ட பதிவு

Sai Pallavi: சமீபத்தில் இணையத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் தான் சாய் பல்லவியின் திருமண புகைப்படம். அதாவது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் சாய்பல்லவி மாலையும் கழுத்துமாக இருந்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீ போல் பரவியது. அதுவும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சாய் பல்லவி திருமணம் செய்து கொண்டார் எனக் கூறப்பட்டது.

இந்த விஷயம் இணையத்தில் பூதாகரம் எடுக்க இப்போது தனது எக்ஸ் தளத்தில் சாய் பல்லவி ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதாவது சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

Also read: சஞ்சய் தத் கழுத்தை ஆக்ரோஷமாக பிடித்த விஜய்.. டெவிலை சந்தித்த லியோ போஸ்டர்

அதன் பிறகு தமிழில் சில படங்கள் நடித்து உள்ள சாய்பல்லவி சிவகார்த்திகேயனின் 21 வது படத்தில் நடிக்கிறார். கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி தான் இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை தான் சமீபத்தில் நடந்துள்ளது.

அதில் வேண்டுமென்றே சிலர் இயக்குனர் மற்றும் சாய் பல்லவி மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை தனியாக எடுத்து திருமணம் செய்தது போல் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த சாய் பல்லவி நான் எப்போதும் வதந்திகளை நம்பி கவலைப்படுவதில்லை என்ற சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Also read: லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

அதாவது தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் இந்த விஷயத்தில் உள்ளடங்கி இருப்பதால் இதைப் பற்றி நான் பேசிய ஆக வேண்டும். அதாவது தன்னுடைய படத்தின் பூஜை விழாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வேண்டும் என்றே சிலர் பணம் கொடுத்து இது போன்ற கேவலமான வேலை செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

மேலும் எனது வேலை குறித்து மகிழ்ச்சியான விஷயங்களை அறிவிக்கும் போது இந்த தேவையில்லாத செயல்கள் அனைத்திற்கும் விளக்கம் அளிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இது போன்று நடிகைகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயல் முற்றிலும் மோசமானது என சாய்பல்லவி பதிவிட்டிருக்கிறார்.

Also read: வெற்றிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.. என்னதான் சொகுசாக இருந்தாலும் ரஜினிக்கு இதுல கிடைக்க சுகமே வேற

- Advertisement -

Trending News