Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், நமக்கு தெரிந்த சமையல் வேலையை வைத்து எப்படியாவது சொந்த காலில் முன்னேற வேண்டும் என்று போராடி வருகிறார் பாக்யா. இதற்கு இடையில் எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெறிந்து ஒவ்வொரு படிக்கட்டுகளாக எடுத்து வைத்து ஜெயித்து வருகிறார்.
ஆனால் பாக்யாவின் இரண்டு மகன்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது. அதற்கு எந்தவித ஸ்டெப்பும் எடுக்காமல் இருப்பது கொஞ்சம் லாஜிக் இல்லாமல் இருக்கிறது. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கையில் பைத்தியக்காரத்தனமாக உள்ளே நுழைந்து விளையாடி வருகிறார் மாலினி. எப்படியாவது ஜெனியுடன் சேர்ந்து விட வேண்டும் என்று தவிக்கும் செழியனை மறுபடியும் சிக்கலில் மாட்டி விட்டார்.
அதாவது ஜெனி அப்பா செழியன் இடம் பேசிட்டு வருகிறேன் என்று வருகிறார். அதே நேரத்தில் அவர் வரும்பொழுது செழியன் உடன் மாலினி பேசுகிறார். அப்பொழுது இதைப் பார்த்த ஜெனியின் அப்பாவிடம், மாலினி தனக்கும் செழியனுக்கும் இன்னும் தொடர்பு இருப்பது போல் பைத்தியக்காரி மாதிரி உளறி விடுகிறார்.
Also read: மகாநதி சீரியலுக்கு என்ட்ரி கொடுத்த பாக்கியலட்சுமி மருமகள்.. அதிரடியாக விலகிய நடிகை
இதுதான் உண்மை என்று நம்பிய ஜெனி அப்பா செழியினை திட்டி விட்டு வீட்டுக்கு போய் நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்கிறார். அப்பொழுது உண்மை என்னவென்று யோசிக்காத ஜெனி, மாலினி சொல்லுவதை அப்படியே கண்மூடித்தனமாக நம்பி விட்டார். ஆக மொத்தத்தில் செழியன் வாழ்க்கை இதோடு முடிந்து போனது மாதிரி பாக்கியவிடம் வந்து புலம்பி தவிக்கிறார்.
இன்னொரு பக்கம் பொருட்காட்சி நடக்கும் இடத்திற்கு அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் வந்து விடுகிறார். இவரை அமிர்தா சந்தித்து விடக்கூடாது என்பதற்காக பாக்யா யாருக்கும் தெரியாமல் கணேசனிடம் எனக்கு இன்னும் டைம் கொடு. நான் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேசி ஒரு முடிவு பண்ணுகிறேன் என்று சொல்கிறார். அதற்கு அந்த சைக்கோ இன்னும் கொஞ்ச நாள்தான் இல்லை என்றால் நான் அமிர்தாவை நேரடியாக சந்தித்து விடுவேன் என்று பிளாக்மெயில் பண்ணுகிறார்.
இப்படி இரண்டு மகன்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் பாக்கியா இதற்கான ஸ்டெப் எதுவும் எடுக்காமல் இருந்து வருகிறார். அதை எல்லாம் விட கோபி பூமர் அங்கிள் மாதிரி பாக்கியவை தோற்கடிப்பதற்கு ஒவ்வொரு நேரத்தையும் செலவழித்து வருகிறார். இதற்கிடையில் ராதிகா அன்னை தெரேசா மாதிரி நல்ல மனதுடன் முழுமையாக மாறி பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து வருகிறார்.
Also read: கதிரை வேட்டை நாயாக நினைத்து அடித்தது குணசேகரன்.. எலக்ஷனில் ஜெயிக்க போட்ட மாஸ்டர் பிளான்