டாப் ஹீரோக்களின் சம்பளத்திற்கு ஆப்பு வைக்கும் தயாரிப்பாளர்கள்.. இது பக்கா பிளானா இருக்கே

Top Heroes Salary: ஒரு நேரத்துல வாய்ப்பை மிஸ் பண்ணிட கூடாது என்பதற்காக கிடைக்கிற சம்பளத்தில் நடித்துக் கொடுத்த ஹீரோக்கள் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தால் வீட்டுக் கதவை தட்டுங்கள் என்று கரராக பேசி வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் வேறு வழியில்லாமல் டாப் ஹீரோக்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்கும் நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

ஆனால் இதோடு நிறுத்திக் கொள்ளாமல் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் அவர்களுடைய ஈகோ பிரச்சினையால் ஒவ்வொரு படத்திற்கும் சம்பளத்தை கூட்டிக் கொண்டே போகிறார்கள். இப்படியே போனால் தயாரிப்பாளர்கள் தலையில் முக்காடு போட்டு திரிய வேண்டியதுதான். அதிலும் ரஜினி மற்றும் விஜய் 200 கோடி 250 கோடி என்று ஒவ்வொரு படத்திலும் 50 கோடியை கூட்டிக் கொண்டே போகிறார்கள்.

ஹீரோக்களின் சம்பளத்துக்கு எதிராக ஒன்று கூடிய தயாரிப்பாளர்கள்

இவர்கள் இப்படியே செய்தால் பின்னாடியில் இருக்கும் ஹீரோக்களும் சும்மாவா இருப்பார்கள். அவர்களும் அவர்களுடைய பங்குக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதலில் டாப் ஹீரோக்களின் சம்பளத்திற்கு ஆப்பு வைக்கும் விதமாக தயாரிப்பாளர்கள் மொத்தமாக சேர்ந்து ஒரு பிளானை போட்டு விட்டார்கள்.

அதாவது மொத்த சம்பளத்திற்கு பதிலாக இனி படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளின் விற்பனையிலிருந்து ஒரு குறிப்பிட்ட % தொகையை அவர்களுக்கு வழங்கலாம் என்று தீர்மானம் செய்து இருக்கிறார்கள். எப்படியும் திரைப்படங்கள் சேட்டிலைட் மற்றும் ஓடிடி விற்பனை இல்லாமல் வெளியிட போவதில்லை.

அதனால் அதிலிருந்து ஒரு பங்கு அவர்களுக்கு சம்பளமாக கொடுக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். இதற்கான பிள்ளையார் சுழி அடுத்த வார தொடக்கத்திலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளிவர இருக்கிறது. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் சேர்ந்து எடுக்கும் இந்த முடிவினால் டாப் ஹீரோக்கள் சம்பளத்திற்கு ஒரு முடிவு கட்டும் விஷயமாக இருக்கும்.

அதனால் இனி யாரும் சம்பளத்தை டிமாண்ட் பண்ண வாய்ப்பே இருக்காது. அத்துடன் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை, ஏனென்றால் இது ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு என்பதால் இதற்கு சம்மதம் கொடுத்து ஆக வேண்டும். எங்க அடித்தால் ஹீரோக்கள் அடங்குவார்கள் என்று தெரிந்த நிலையில் பக்காவாக பிளான் போட்டு ஒட்டுமொத்த தயாரிப்பார்கள் சேர்ந்து எடுக்கப் போகும் இந்த பிளான் நிச்சயமாக டாப் ஹீரோக்களின் சம்பளத்திற்கு மிகப்பெரிய ஆப்பாக இருக்கும்.

இதுல வேற விஜய் நடிக்கப் போகும் தளபதி 69 படத்திற்கு 275 கோடி + வருமான வரி என்று போட்ட பிளான் எல்லாம் தவிடு பொடியாகும் அளவிற்கு ஒரு நிலைமை வரப்போகிறது. அது மட்டுமில்லாமல் ரஜினியும் அவருடைய படத்திற்கு இந்த மாதிரியான சம்பளம் வேண்டும் என்று கேட்க முடியாது. ஆக மொத்தத்தில் தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு அதிகாரப்பூர்வமாக ஆகிவிட்டால் இனி ஹீரோக்களின் சம்பளப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைத்துவிடும்.

தயாரிப்பாளர்கள் தலையில் முக்காடு போட வைத்து சம்பவம்

Next Story

- Advertisement -