தமிழ் சினிமாவில் நடக்க போகும் காலவரையற்ற போராட்டம்.. தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் எடுத்த அதிரடி முடிவு

Producers Meeting: இன்று நடந்து வருகிறது தயாரிப்பாளர்கள் சங்க பேச்சு வார்த்தை. பல அதிரடி முடிவுகளை பற்றி பேசி உள்ளனர். இனிமேலும் பொருத்துப் போக முடியாது காலவரையற்ற போராட்டத்தில் இறங்க வேண்டும் என்பது தான் இப்பொழுது அவர்கள் முன்வைக்கும் முதல் கோரிக்கை.

விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் போன்ற ஹீரோக்கள் ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆனது. இவர்களுக்கு கடைசியாக எந்த படம் ஹிட் படமாக அமைந்தது என்று கூட தெரியவில்லை. ஆனால் இவர்கள் தொடர்ந்து பல படங்களில் நடிக்கிறார்கள்.

தற்சமயம் பெரிய ஹீரோக்கள் அனைவரும் சின்ன பட்ஜெட் படங்கள் நடிப்பதற்கு தயாராக இல்லை, பெரிய தயாரிப்பாளர்களைத் தேடி தான் படத்தை கொடுக்கிறார்கள். படமே ஓடவில்லை என்றாலும் சம்பளம் மட்டும் குறைப்பதில்லை. 15 கோடிகள் வரை வாங்குகிறார்கள்.

தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் எடுத்த அதிரடி முடிவு

ஓ டி டி மற்றும் சேட்டிலைட் உரிமைகள் என நமது படம் நல்ல வியாபாரம் ஆகிறது என ஹீரோக்கள் நினைத்து வருகின்றனர். ஆனால் இப்பொழுது ஓ டி டி நிறுவனங்கள் படத்தை அதிக விலைக்கு வாங்குவதில்லை. இந்தப் படம் இவ்வளவு தான் என தயாரிப்பாளர்களுக்கு செக் வைக்கிறது. இந்த ஹீரோக்களுக்கு இவ்வளவுதான் வியாபாரம் என்று விலையை நிர்ணயிக்கிறார்கள்

எல்லா லாப நஷ்டங்களையும் தயாரிப்பாளர்கள் தான் சுமக்கிறார்கள். ஹீரோக்கள் எளிதாக அடுத்த படத்திற்கு இன்னும் அதிகமாக தான் சம்பளம் கேட்கிறார்கள். இப்படி நடுத்தர ஹீரோக்களை வைத்து படம் எடுத்து பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய் உள்ளனர்

அதனால் தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த தீபாவளி வரை கெடு கொடுத்திருக்கிறார்கள். இதுவரை ஹீரோக்கள் கமிட்டான படங்களுக்கெல்லாம் கேட்கிற சம்பளத்தை கொடுத்து விடுவோம். ஆனால் தீபாவளிக்கு பின் ஹீரோக்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கப் போவதாக தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர்.

Next Story

- Advertisement -