நம்பர் ஒன் இடத்தை உறுதி செய்த தளபதி 69.. ரஜினி பாணியில், சம்பளத்தைக் கேட்டா சும்மா அதிருதில்ல!

Thalapathy 69 Vijay Salary: படம் நல்லா இருக்கோ இல்லையோ, விஜய் நடித்தால் அந்த படம் வசூல் அளவில் லாபத்தை கொடுத்து விடும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு வந்து விட்டது. அதனால் விஜய்யை வைத்து எந்த அளவிற்கு சம்பாதிக்க முடியுமோ அதை சம்பாதித்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் முடிவு பண்ணி விட்டார்கள். அதனால் இவருக்கு சம்பளம் எத்தனை கோடி கொடுத்தாலும் பரவாயில்லை என்று தளபதி கேட்கும் சம்பளத்தை வாரி இறைக்க முன் வருகிறார்கள்.

ஆனால் இந்த நேரத்தில் விஜய் ஆட்டநாயகனாக வசூலில் கல்லா கட்டாமல் இதுவரை சம்பாதித்த பணத்தை காலி பண்ணும் வகையில் அரசியலில் குதிக்கப் போகிறார். அந்த வகையில் கடைசியாக நடிக்கப் போகும் தளபதி 69 படத்துடன் சினிமாவில் பிரேக் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். இது எந்த அளவிற்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறதோ, அதே மாதிரி தயாரிப்பாளர்கள் தலையிலும் பெரிய இடியாக அமைந்துவிட்டது.

ஆட்டநாயக்கனாக ஜொலிக்கும் தளபதி

இந்த நிலையில் எப்படியாவது அவருடைய கடைசி படத்தை நாம் தயாரிக்க வேண்டும் என்று பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை தெரிந்த தளபதி சும்மா இருப்பாரா, இதுதான் சான்ஸ் என்று ரஜினி பாணியில், சம்பளத்தை கேட்டால் சும்மா அதிர வேண்டும் என்று சொல்வதற்கு ஏற்ப சம்பளம் ரீதியாக நம்பர் ஒன் இடத்தை உறுதி செய்து விட்டார்.

அந்த வகையில் தளபதி 69 படத்தில் நடிக்கப் போவதற்கு கிட்டத்தட்ட 275 கோடி சம்பளத்தை வேண்டும் என்று உறுதி செய்து விட்டார். அதே மாதிரி இவர் நடிக்க தயார் என்றால் நாங்கள் அவர் கேட்கும் சம்பளத்தை தாராளமாக கொடுக்க ரெடி என்று தயாரிப்பாளர்களும் ஓகே சொல்லிவிட்டார்கள். அது மட்டும் இல்லாமல் 275 கோடி + அதற்கு தேவையான வரிகளையும் நாங்கள் கட்ட தயார் என்று விஜய் படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்து விட்டார்கள்.

இதனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் விஜய் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து கொஞ்சம் கூட பிரேக் எடுக்காமல் தளபதி 69 படத்தை கையில் எடுக்கப் போகிறார். ஆனால் இப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது தான் இன்னும் வரை உறுதியாகாமல் இருக்கிறது. ஆனால் தற்போது வரை எச் வினோத்துடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது.

மேலும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி தளபதியின் அசுர வளர்ச்சி அனைவரையும் வாயடைக்கும் அளவிற்கு ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அது என்னவென்றால் விஜய் நடிப்பில் 50வது படமாக வெளிவந்த சுறா படத்தில் கிட்டத்தட்ட 75 லட்சம் தான் சம்பளமாக பெற்றிருந்தார்.

ஆனால் அடுத்த 18 படங்களிலேயே 275 கோடி சம்பளத்தை பெரும் அளவிற்கு இவருடைய மார்க்கெட் உயர்வதை பார்த்து பலரும் இவர்தான் உண்மையான ஆட்டநாயகன் என்று சொல்லும் அளவிற்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து நம்பர் ஒன் இடம் இவருக்கு தான் என்ற தகுதியை பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 69 படத்தின் அப்டேட்

Next Story

- Advertisement -