வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிரியாமணி தமிழில் நடித்த 5 படங்கள்.. பார்க்க வந்த ஆடியன்ஸை அழ வைத்த அந்தப் படம்

நடிகை பிரியாமணி தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து இவருக்கு தமிழில் வாய்ப்பில்லாததால் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். ஆனாலும் இவர் தமிழில் நடித்த படங்கள் மூலம் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமான நடிகையாக பிரபலமாகி விட்டார். அதிலும் இவர் நடித்த அந்தப் படத்தை பார்த்து அழாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிப்பால் எல்லாரும் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் படங்களை பற்றி பார்க்கலாம்.

கண்களால் கைது செய்: இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜான் வசீகரன், பிரியாமணி, மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் தான் பிரியாமணி தமிழில் நடித்த முதல் திரைப்படம். இப்படத்தில் இவருடைய காதலனுக்காக பணக்காரராய் ஒருவர் செய்யும் தவறுகளை கண்காணிக்கும் விதமாக இப்படம் அமைந்திருக்கும். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

Also read: அட இதுதான் சங்கதியா.? கேப்டன் மில்லருக்கு டாட்டா போட்டு மும்பையில் வட்டமிடும் தனுஷ்

அது ஒரு கனாக்காலம்: பாலு மகேந்திரா இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு அது ஒரு கனாக்காலம் திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், பிரியாமணி, டெல்லி கணேஷ், கருணாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது தனுஷ் வீட்டில் வேலை பார்க்கும் பிரியாமணியின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாத காரணத்தினால் இவரை வந்து வேலை பார்ப்பார். அந்த நேரத்தில் தனுஷ்க்கும் இவருக்கும் ஏற்பட்ட காதலால் இவர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது கதையாக அமைந்திருக்கும். ஆனால் இப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறவில்லை.

மலைக்கோட்டை: இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு மலைக்கோட்டை திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷால், பிரியாமணி மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஒரு காதல் கலந்த அதிரடி திரைப்படமாக வெளிவந்தது. இதில் பிரியாமணியை துரத்தி துரத்தி காதலிக்கும் விஷால். காதல் வேண்டாம் என்று ஒதுங்கி போகும் பிரியாமணியை எப்படி காதலிக்க வைத்து ஒன்று சேர்கிறார் என்பது கதையாகும்.

Also read: உடல் முழுக்க இவ்வளவு பிரச்சனையா? கல்யாணத்திற்கு முன்பே மூட்டை முடிச்சுடன் அக்கட தேசம் சென்ற விஷால்

நினைத்தாலே இனிக்கும்: ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிருத்திவிராஜ், சக்தி வாசு, பிரியாமணி, கார்த்திக் குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் காலேஜ் கதையை மையமாக வைத்திருக்கும். இதில் பிருத்திவிராஜ்க்கு ஜோடியாக பிரியாமணி நடித்திருக்கிறார். இப்படம் நேர்மறையான விமர்சனத்தை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

பருத்திவீரன்: இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்தி, பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ப்ரியாமணிக்கு கார்த்தி மீது இருந்த அளவு கடந்த காதலால் பிடிவாதமாக இவரை காதலித்து கடைசியில் ஊரை விட்டுப் போகும் சூழலில் பிரியாமணிக்கு ஏற்பட்ட சம்பவத்தால் இவர் இறந்து விடுகிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தியேட்டரில் பார்க்க வந்த அனைவரையும் அழ வைத்து மனதளவில் பாதிப்பை அடைய வைத்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து பிரியாமணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

Also read: பருத்திவீரனுக்கு பின் தொடர் மொக்கை வாங்கிய கார்த்தியின் 5 படங்கள்.. வந்தியத்தேவனை வச்சு செய்த  மணிரத்தினம்

- Advertisement -

Trending News