ஒரே வாரத்தில் இவ்வளவு வசூலா? தியேட்டரில் பட்டையை கிளப்பும் ஆடு ஜீவிதம்

Prithviraj : மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் ஆடு ஜீவிதம் படமும் கலெக்ஷனை அள்ளி இருக்கிறது. பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் மற்றும் அமலாபால் ஆகியோர் நடிப்பில் தி கோட் லைஃப் ஆடு ஜீவிதம் படம் கடந்த வாரம் வெளியானது.

அரபு நாட்டுக்கு பல கனவுகள் உடன் வேலைக்கு சென்ற இளைஞன் ஆடு மேய்ப்பவராக ஒரு பாலைவனத்தில் சிக்கிக் கொள்கிறார். பல பிரச்சனைகளை சந்தித்து அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதுதான் ஆடு ஜீவிதம்.

இந்த படத்திற்காக பிருத்விராஜ் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. இதுவும் ஒரு காட்சியில் அவர் ஆடையில் இல்லாமல் நடித்திருப்பார். அதைப் பார்த்து தியேட்டரில் கண்ணீர் விடாத ஆட்களே இல்லை.

100 கோடியை தொட்ட ஆடு ஜீவிதம்

இவ்வாறு பிருத்விராஜ் உயிரை கொடுத்து நடித்த நிலையில் படம் வசூலில் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஆடு ஜீவிதம் படம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் மஞ்சுமல் பாய்ஸ் படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்தப் படத்தின் வசூலை இப்போது ஆடு ஜீவிதம் படம் மிக விரைவில் முறியடிக்க இருக்கிறது.

ஏனென்றால் இந்த படம் ஒரு வாரத்திலேயே கிட்டத்தட்ட 100 கோடி வசூலை பெற்றிருக்கிறது. அதுவும் இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள். ரம்ஜான் பண்டிகைக்காக தொடர் விடுமுறையால் படத்தின் வசூல் வரும் நாட்களில் எதிர்பார்த்ததை விட அதிகமாக பெறும்.

Next Story

- Advertisement -