ஒரு ஹிட் படம் கொடுத்த முரட்டு தைரியம்.. என் கதைக்கு நான் தான் ஹீரோ, விஜய்க்கு நோ சொன்ன பிரதீப்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன்பே பல குறும்படங்களை இயக்கிய இவர், கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அடையாளத்தை பெற்றார். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததோடு வசூலிலும் வெற்றி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு லவ் டுடே என்னும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து, இயக்கியிருந்தார். இந்த படம் அவரை சினிமாவின் உச்சகட்டத்திற்கு கொண்டு போனது என்று சொல்லலாம். படத்தின் கதை மற்றும் பிரதீப்பின் நடிப்பை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் இன்று வரை கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தின் தாக்கம் இளைஞர்கள் இடையே இன்னும் குறையவில்லை என்று கூட சொல்லலாம்.

Also Read:வேற லெவலில் உருவாகும் தளபதி 68 ப்ரோமோஷன் வீடியோ.. பிக் பாஸ் பிரபலத்தை ஸ்கெட்ச் போட்ட தூக்கிய வெங்கட் பிரபு

லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்க வேண்டிய கொரோனா குமார் திரைப்படத்தின் வாய்ப்பு பிரதீப்புக்கு கிடைத்தது. தமிழ் சினிமாவில் இவர் ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்றார். இவருடன் படம் பண்ணுவதற்கு தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர் என்று கூட சொல்லலாம். மேலும் லவ் டுடே ரிலீஸ் சமயத்தில் நடிகர் விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாக கூட இவர் தெரிவித்திருந்தார்.

மேலும் லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தன்னுடைய அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதரை தான் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த தகவலும் அதிகாரப்பூர்வமாகவே வெளியாகியது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் ஏஜிஎஸ் நிறுவனம் நடிகர் விஜய்யை வைத்து படம் பண்ணுவதாகவும், அதை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது.

Also Read:பல கோடிகள் சம்பளம் வாங்கியும் இன்கம்டேக்ஸில் சிக்காத 5 நடிகர்கள்.. விஜய்யை பீதியில் உறைய வைத்த புலி

தளபதி 68 அறிவிப்பு என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொடுத்தாலும் இடையில் பிரதீப் என்னதான் ஆனார் என்ற கேள்வியும் இருந்தது. தளபதி விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்த பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தத்தில் இருக்கும் பிரதீப் தான் அந்த படத்தை இயக்கி இருக்க வேண்டும். இதில் தான் அவர் , லவ் டுடே படத்தின் வெற்றியினால் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுத்திருக்கிறார்.

அதாவது, தளபதி விஜய்யை இயக்கம் வாய்ப்பு கிடைத்தும், என்னுடைய கதைகளில் நானே ஹீரோவாக நடிக்க இருக்கிறேன். மூன்று, நான்கு வருடங்களுக்கு பின் வேண்டுமானால் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். லவ் டுடே படம் எதிர்பாரா வெற்றியை கொடுத்திருந்தாலும், இப்படி வந்த பெரிய வாய்ப்பை தட்டி கழிக்கும் அளவுக்கு முடிவு எடுப்பது எல்லாம் கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.

Also Read:புளியங்கொம்புல இருந்து முருங்க கொம்புக்கு வந்த தோனி.. விஜய்யை நம்பி மொக்கை வாங்கிய தல

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்