வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வழியே இல்லாமல் சல்மான் கான் இடம் சரணடைந்த பிரபுதேவா.. சம்பாதித்த மொத்த பணத்துக்கும் வந்த ஆபத்து

கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பிரபுதேவா இதுவரை எந்த ஒரு படத்திலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஓரளவு பிரபு தேவா சாதித்த படங்கள் என்றால் காதலன், பெண்ணின் மனதை தொட்டு, காதலா காதலா போன்ற படங்களை சொல்லலாம். போக்கிரி, வான்டெட் , ரவுடி ரத்தோர், தபாங் போன்ற படங்களை இயக்கி இவர் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தார்.

யார் என்ன வேணாலும் சொல்லட்டும் நான் நடிப்பதை நிறுத்த மாட்டேன் என்று வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்களை நடித்து வெளியிட்டு தான் வருகிறார் பிரபுதேவா. நடிப்பு மட்டும் இல்லை பிரபுதேவா ஒரு சில படங்களை தயாரித்து, இயக்கியும் இருக்கிறார்.தேவி, சம் டைம்ஸ், போகன் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த பிரபுதேவாவின் தேள் திரைப்படம் வந்த சுவடு தெரியாமல் ப்ளாப் ஆனது. மூன்று நாட்களுக்கு மேல் எந்த ஒரு தியேட்டரிலும் ஓடவில்லை. தேள் படம் ஒரு கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்று அதன் பின் தான் அவருக்கு தெரியவந்தது.

நாம் எடுத்த படத்தை அப்படியே தமிழில் எடுத்து விட்டனர் என கேள்விப்பட்ட கொரியன் தயாரிப்பு நிறுவனம் தேள் பட குழு மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்தது. அதன் காரணமாக தேள் படத்திற்கு 18 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கும்படி உத்தரவு வந்தது.

இதனால் பிரபுதேவா மற்றும் மொத்த பட குழுவும் அதிர்ச்சியில் குறைந்து போயினர். ஒரு கோடி ரூபாய் கூட வசூல் செய்யாத படத்திற்கு 18 கோடிகள் நஷ்ட ஈடா என்று பேரதிர்ச்சிக்குள்ளாகினர. இதனால் இந்த பிரச்சனையை பிரபு தேவா தனது பாலிவுட் நண்பரான சல்மான் கான் இடம் கொண்டு போனார்.

பின்னர் சல்மான் கான் உதவியுடன் இந்த பிரச்சனைக்கு பஞ்சாயத்து நடைபெற்றது. பஞ்சாயத்து முடிவில் தேள் படத்திற்கு நஷ்ட ஈடாக ஒன்றரை கோடிகள் வரை கட்டி விட்டு திரும்பியுள்ளனர். ஓடாத படத்திற்கு இவ்வளவு பிரச்சனை என்றால் “ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்” படத்தை அப்படியே லியோ படமாக எடுத்த லோகேஷ்க்கு என்ன பிரச்சனை வருமோ?

- Advertisement -

Trending News