பீஸ்ட் படத்தால் நொந்து போயிருக்கும் விஜய்.. அடுத்த ஆப்பு வைக்க லைனில் நிற்கும் இயக்குனர்

தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக மாஸ் காட்டி வரும் விஜய்க்கு பீஸ்ட் திரைப்படம் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அவரின் ரசிகர்களே அந்த படத்தை கழுவி ஊற்றிய நிலையில் இயக்குனர் நெல்சனையும் விஜய் ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.

தற்போது விஜய், இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த படம் விஜய்க்கு பெரிய ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா விஜய்யை வைத்து படம் இயக்குவதற்கு ரொம்பவும் ஆர்வம் காட்டி வருகிறாராம். ஏற்கனவே இவர் அஜித்தை வைத்து வேதாளம், விசுவாசம், வீரம், விவேகம் போன்ற திரைப்படங்களை இயக்கி இருந்தார்.

அதில் சில திரைப்படங்கள் கடும் விமர்சனத்தை சந்தித்தது. மேலும் அஜித் அவருடன் தொடர்ச்சியாக படம் பண்ணுவதையும் அவருடைய ரசிகர்கள் விரும்பவில்லை. அதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா ரஜினியை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படமும் பெரிதாக லாபம் ஈட்டவில்லை. இதில் அஜீத் மீண்டும் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ந்த அவருடைய ரசிகர்கள் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் அவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது இப்படியிருக்க விஜய், சிறுத்தை சிவாவின் தொடர் நெருக்கடியால் அவரிடம் கதை கேட்க சம்மதித்துள்ளார். கை நிறைய கதைகளை வைத்துக் கொண்டு இருந்த சிவாவும் விஜய்க்காக ஒரு கதையைக் கூறியிருக்கிறார். அதைக்கேட்ட விஜய்யும் நல்லா இருக்கு நிச்சயம் பண்ணலாம் என்றும் கூறியுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

தற்போது வெளிவந்துள்ள இந்த செய்தியால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஏற்கனவே பீஸ்ட் திரைப்படம் விஜய்க்கு மறக்க முடியாத ஒரு அடியாக இருக்கிறது. இதில் சிறுத்தை சிவாவுடன் படம் பண்ணினால் மொத்தமும் போய்விடும் என்று அவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். இந்த விஷயத்தில் தளபதி என்ன முடிவு எடுத்துள்ளார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.