விஜய் சேதுபதி நிலைமை நமக்கு வேணாம்.. அக்கட தேசம் படையெடுக்கும் அரக்கன்

Actor Vijay Sethupathy: விஜய் சேதுபதி இப்போது தமிழை விட மற்ற மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஒரு காலத்தில் இவருடைய படம் மாதத்திற்கு ஒரு முறையாவது வெளியாகி விடும். அந்த அளவுக்கு கோலிவுட்டை இவர் ஆக்கிரமித்து இருந்தார்.

ஆனால் அதுவே அவருக்கு பின்னடைவாக மாறியது. கையில் கிடைக்கும் படங்களை எல்லாம் ஒப்புக்கொண்டு நடித்த இவருக்கு தோல்விதான் மிஞ்சியது. இதுவே அவருக்கு எதிரான விமர்சனமாகவும் மாறியது. அது மட்டுமல்லாமல் வில்லன் வாய்ப்புகள் தான் இவரை தேடி அதிகமாக வந்தது.

இதனால் யோசித்த விஜய் சேதுபதி மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இருந்தாலும் தமிழையும் விட்டுக் கொடுக்காமல் கனமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவ்வாறாக அவர் தற்போது தனக்கு கிடைத்த விமர்சனங்களை பார்த்து சுதாரித்துக் கொண்டுள்ளார்.

Also read: தலைவரே உங்கள ஹாக் பண்ணிட்டாங்களா.? 31 வயது நடிகையிடம் ஜொள்ளு விடும் SJ சூர்யா

அதையே தான் இப்போது நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவும் பின்பற்ற இருக்கிறார். ஏனென்றால் இப்போது வில்லன் கேரக்டரா கூப்பிடுங்க சூர்யாவை என அனைவரும் அவரை தேடி படையெடுத்து வருகிறார்கள். அதிலும் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனியில் இவருடைய நடிப்பு பட்டையை கிளப்பியது.

அதை தொடர்ந்து தற்போது ஜிகர்தண்டா 2 வெளியாகி உள்ளது. ஆனால் மார்க் ஆண்டனி அளவுக்கு அவருடைய மாஸ் இல்லை என்ற பரவலான கருத்துக்கள் கிளம்பியுள்ளது. இதனால் சுதாரித்துக்கொண்ட எஸ் ஜே சூர்யா தமிழில் கொஞ்சம் பிரேக் எடுக்க முடிவெடுத்துள்ளாராம்.

ஏனென்றால் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதன் மூலம் மக்களின் வெறுப்புக்கும் ஆளாக கூடும். அதனால் அவ்வப்போது வெயிட்டான கேரக்டரை தேர்ந்தெடுத்து தமிழில் நடிக்கலாம் என அவர் பிளான் போட்டிருக்கிறார். அந்த வகையில் இப்போது அவர் மலையாளம் பக்கம் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார். ஆக மொத்தம் விஜய் சேதுபதி நிலைமை தனக்கு வேண்டாம் என எஸ் ஜே சூர்யா முடிவு எடுத்துள்ளது ஒருவகையில் நல்லது தான்.

Also read: சப்புன்னு போன ஜப்பான், சில்லுன்னு கூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்தியை வெறுப்பேத்தும் ஆசாமி