சாவு பயத்தை காட்டி பாக்யராஜ் வெளியிட்ட வீடியோ.. ஆதாரத்துடன் காவல்துறை கொடுத்த பதிலடி

Bhagyaraj : சமீபத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இமாச்சல் பிரதேசத்தில் இருந்து சென்னை திரும்பி வரும் அவருடைய கார் விபத்துக்கு உள்ளாகி சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. கிட்டத்தட்ட ஒன்பது நாள் தேடுதலுக்கு பிறகு சடலமாக வெற்றி துரைசாமி மீட்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் வீரியம் குறையும் முன்பு இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் பரபரப்பை கிளப்பி இருந்தார். அதாவது கோயமுத்தூர் அருகே ஒரு ஆற்றில் குளிக்க வருபவர்களை சில ஆற்றில் மூழ்கடித்து கொள்கின்றனர். அதுவும் அவர்களின் உடலை பாறைக்கு அடியில் மறைத்து வைத்து விடுவார்கள்.

மேலும் அவர்களின் உடலை மீட்க பணம் பெற இவ்வாறு தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று பாக்யராஜ் கூறியிருந்தார். மேலும் பாக்யராஜின் வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கிய பின் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதுகுறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Also Read : விஜயகாந்த்காக கூட வரல, உயிர் நண்பன் வெற்றிக்காக ஓடோடி வந்த அஜித்.. காட்டு தீயாக பரவும் ஃபோட்டோ

அதாவது பாக்யராஜ் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. அவருடைய குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மேலும் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள காவல் நிலையத்தில் எதுவும் பதிவாகவில்லை. அதுவும் சொல்ல போனால் குறிப்பாக 2022 மற்றும் 2023 எந்த உயிரிழப்பு சம்பவமும் நடக்கவில்லை.

தேவையில்லாமல் வதந்தியை உருவாக்குவது மற்றும் பரப்புவது குற்றச் செயலாகும் என்று தமிழ்நாடு ஃபேக்ட் செக் இணையதளத்தில் பத்ரி நாராயணன் விளக்கம் கொடுத்துள்ளார். இதன் மூலம் பாக்யராஜ் சொல்வதில் உண்மை இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கின்றனர் காவல்துறையினர்.

Also Read : பணத்துக்காக காவு வாங்கும் கொள்ளை கும்பல்.. வெற்றி துரைசாமி இறந்த சமயத்தில் பாக்யராஜ் வெளியிட்ட பகீர் வீடியோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்