தங்கமயிலிடம் சரண்டர் ஆன பாண்டியன்.. டம்மியான கோமதி, கூட்டணியில் இணைந்த ராஜி மீனா

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பி ஓவராக இடம் கொடுத்து வைத்திருக்கிறார். இதனால் தங்கமயிலும் எல்லோரும் நம் கண்ட்ரோலுக்கு வந்து விட வேண்டும் என்று ஒவ்வொருவரையாக கவுத்து வருகிறார். அந்த வகையில் மாமன்னர் பாண்டியன் மனதில் இடம் பிடித்து விட்டார்.

அத்துடன் கடையில் வேலை பார்க்கும் தாத்தா மற்றும் பழனிச்சாமி ஆகியவரையும் தங்கமயில் நல்ல மருமகள் என்று சொல்லும் அளவிற்கு நாடகத்தை நடத்திவிட்டார். இதனை தொடர்ந்து அவர்களுக்கு கடையில் போய் விருந்து சாப்பாடு கொடுப்பதற்கு கிளம்பி விட்டார். இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோமதி புலம்புகிறார்.

மருமகளை கண்மூடித்தனமாக நம்பும் பாண்டியன்

அந்த வகையில் கோமதிக்கு சப்போர்ட்டாக ராஜி மற்றும் மீனா சேர்ந்து இனி நீங்கள் ஒரு கண்டிப்புடன் இருக்கும் மாமியாராக நடந்து கொள்ளுங்கள். நீங்க சொன்னால் தங்கமயில் கேட்டு தான் ஆக வேண்டும். எல்லா உரிமையும் உங்க கையில் இருக்கிறது என்று கோமதியுடன் ராஜி மற்றும் மீனா கூட்டணி போட்டு விட்டார்கள். அதன்படி கோமதி இன்று தங்கமயிலை கடைக்கு சாப்பாடு கொண்டு போக விடமாட்டேன் என்று உறுதியாகி விட்டார்.

ஆனால் தங்கமயில் வழக்கம் போல் கணவர் சரவணனுக்கும், கடையில் இருக்கும் பாண்டியன் மற்றும் மற்றவர்களுக்கும் சாப்பாடு எடுத்துக் கொண்டு போவதற்கு எல்லாத்தையும் எடுத்து வைத்து விட்டார். பிறகு கோமதி நீ உன் புருஷனுக்கு மட்டும் சாப்பாடு கொடுத்துட்டு வா. கடைக்கு கொண்டுட்டு போக வேண்டாம் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் தங்கமயில் நீங்க சொல்றதெல்லாம் என்னால் கேட்க முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப கோமதியை டம்மி ஆக்கிவிட்டு பாண்டியனுக்கு போன் பண்ணி விட்டார். மாமா நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரட்டுமா என்று கேட்க, அதற்கு பாண்டியன் உனக்கு எந்த கஷ்டமும் இல்லை என்றால் எடுத்துட்டு வா சொல்கிறார். அதற்கு தங்கமயில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, நான் எடுத்துட்டு வருகிறேன் என்று சொல்லி விடுகிறார்.

உடனே கோமதி இடம் மாமாவே எதுவும் சொல்லலை எடுத்துட்டு வா என்று சொல்லிவிட்டார். அதனால் கிளம்புகிறேன் என்று ஆட்டோவுக்கு போன் பண்ணி கிளம்பி விட்டார். இதனால் திருட்டு முழியாக முழித்துக் கொண்டிருக்கும் கோமதி, இனி அவ்வளவுதான் நம்ம பேச்சுக்கு இங்கே மரியாதை இல்லை. இந்த தங்கமயில் ஓவராக தான் ஆட்டம் போடுகிறார். எல்லாம் என் புருஷன் கொடுக்கிற இடம் தான் என்று புலம்பிக் கொள்கிறார்.

இப்படியே போனால் இந்த வீட்டு நிர்வாகத்தையும் தன் கையில் வாங்கிக் கொண்டு அனைவரையும் அதிகாரம் பண்ணிவிடுவார் என்ற பயமும் கோமதிக்கு வந்து விட்டது. ஆனால் இதுதான் அடுத்த கட்ட ப்ளான் ஆக இருக்க வேண்டும் என்று தங்கமயிலுக்கு குறுக்கு புத்தியில் வழி சொல்லிக் கொடுக்கிறார் இவருடைய அம்மா பாக்கியம். இதைப் பற்றி எதுவும் தெரியாத பாண்டியன் கொஞ்சம் கொஞ்சமாக மருமகள் தங்கமயில் இடம் சரண்டர் ஆகி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -