பாண்டியனுக்கு மருமகள் வைத்த செக்.. புருசனை வைத்து அதிகாரம் பண்ண போகும் தங்கமயில்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில், புருஷனை தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றுமே தெரியாத வெகுளி போல் தினமும் சரவணனிடம் ஒத்து ஊதுகிறார். அதற்கேற்ற மாதிரி தங்கமயில் அம்மா பாக்கியம், சரவணனை கூட்டிட்டு கொஞ்சம் தனியாக போ. அப்பதான் உன் புருஷன் மொத்தமாக நீ சொல்றதை கேட்பார் என்று மந்திரம் ஓதி விட்டார்.

அதன்படி சரவணன் வீட்டுக்கு வந்ததும், வழக்கம்போல் எல்லோரையும் பற்றியும் புரணி சொல்லிவிட்டு கடைசியில் சம்பளத்தை பற்றி கேட்க ஆரம்பித்து விட்டார். ஆனால் தங்கமயில் சம்பளத்தை பற்றி கேட்டதும் சரவணன் தூங்க ஆரம்பித்து விட்டார். இது தெரியாத தங்கமயில், இனி நீங்கள் மாசம் சம்பளம் வாங்கினதும் மொத்தத்தையும் என்னிடம் கொடுங்கள்.

புருஷனை கைக்குள் போட்ட தங்கமயில்

கதிர் எப்படி செலவுக்கு பாண்டியனிடம் பணம் கொடுக்கிறாரோ, அதே மாதிரி நம்ம செலவுக்கு மட்டும் மாமாவிடம் பணம் கொடுக்கலாம். அதில் கொஞ்சம் பணத்தை உங்களோட செலவுக்கு நான் தருகிறேன். மீதி பணத்தை நம்முடைய எதிர்காலத்துக்கு நான் சேர்த்து வைக்கிறேன் என்று வாய்க்கு வந்தபடி தங்கமயில் உளறிக் கொண்டிருக்கிறார். ஆனால் இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத சரவணன் நல்லா தூங்கிவிட்டார்.

பிறகு காலையில் எழுந்து சரவணன் கிளம்பி கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் மறுபடியும் இந்த பேச்சை எடுக்க ஆரம்பித்தார். ஆனால் இப்பொழுது வேண்டாம் என்று முடிவு பண்ணிய நிலையில் நாம் இருவரும் சேர்ந்து ஹனிமூன் தனியாக போகலாம் என்று சரவணனிடம் சொல்கிறார். உடனே சரவணன், இதைப் பற்றி நான் அப்பாவிடம் பேசிட்டு சொல்கிறேன் என்று சொல்லி கிளம்பி விட்டார்.

இப்படியே தங்கமயில் கொஞ்சம் கொஞ்சமாக பேசி சரவணனை முழுமையாக கவுத்து பாண்டியனுக்கு செக் வைக்கப் போகிறார். அப்பொழுதுதான் இந்த பாண்டியனுக்கு தங்கமயில் பற்றிய சுயரூபம் தெரியவரும். இதனைத் தொடர்ந்து மீனா, அப்பாவின் பிறந்தநாள் வருவதை ஒட்டி அங்க போய் கலந்துக்க முடியாது என்று யோசித்து கவலைப்படுகிறார்.

பிறகு செந்தில், மீனாவை சமாதானப்படுத்தி விடுகிறார். அடுத்ததாக ராஜி மற்றும் மீனா சேர்ந்து கோலம் போடுகிறார்கள். அப்பொழுது ராஜி, கதிர் வேலைக்குப் போக வைத்திருந்த பைக் அவருடைய நண்பருடையது. தற்போது நண்பருக்கு பைக் வேண்டும் என்று பைக்கை திருப்பிக் கொடுத்து விடுகிறார். இதனால் எப்படி வேலைக்கு போவது என்று கஷ்டப்பட்டு வருகிறார் என்று சொல்கிறார்.

அதற்காக கண்டிப்பா நான் வேலைக்கு போகணும் என்னால் முடிந்த உதவியை நான் கதிருக்கு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். உடனே மீனா எனக்கு தெரிந்த ஒரு வீடு இருக்கு. அங்க போய் டியூஷன் எடுக்கிறியான்னு கேட்கிறார். அதற்கு ராஜி ஓகே சொல்லி, நான் இதைப் பற்றி மாமாவிடம் சம்மதம் வாங்கி விடுகிறேன் என்று சொல்கிறார். இதையெல்லாம் தொடர்ந்து வழக்கம் போல் தங்கமயில் சாப்பாடு எடுத்துட்டு கடைக்கு கிளம்புகிறார்.

அப்பொழுது கோமதி ரொம்பவே அதிகாரம் பண்ணி நில்லு போகக்கூடாது என்று தங்கமயிலை நிறுத்தி விடுகிறார். இன்னும் இந்த பிரச்சனையை வைத்து தங்கமயில் புருஷன் இடமும் மாமனாரிடமும் கொளுத்தி போட போகிறார். கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப கோமதி எடுத்த இந்த தைரியமான முடிவு நிச்சயம் தங்க மயிலுக்கு எதிராக முடியும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -