மகனின் வாழ்க்கையை வஞ்சகத்தால் வீணாக்கிய பாண்டியன்.. கேள்விக்குறியாக நிற்கும் மீனாவின் காதல்?

Pandian Stores Season 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதை கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடத்தில் பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் சென்டிமென்ட் மற்றும் இந்த காலத்திலும் மகன்கள் அப்பா பேச்சை கேட்டுக் கொண்டு இருப்பது தான். ஆனாலும் இதை சரியாக புரிந்து கொள்ளாத பாண்டியன் மகன்களிடம் ஹிட்லர் மாதிரியும், அவர்களுடைய ஆசை கனவுகளுக்கு தடங்கலாகவும் இருந்து வருகிறார்.

அதாவது பாண்டியன் மட்டும் காதலிச்சு வீட்டுக்கு தெரியாம கோமதியை கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி இருப்பாரு. ஆனா பசங்க காதலிச்சா மட்டும் ஏன் தான் பிடிக்க மாட்டேங்குதோ. இதனால் இவருடைய மூத்த மகன் சரவணன் காதல் தோல்வி அடைந்து விட்டது. அந்த பொண்ணை மறுபடியும் சந்தித்த சரவணனுக்கு பேராதிச்சியாக அவருக்கு வேறொருடன் திருமணமாகிவிட்டது என்று தெரிந்துவிட்டது.

இதை தாங்கிக் கொள்ள முடியாத சரவணன் குடிபோதையில் கீழே படுத்து புலம்ப ஆரம்பித்து விட்டார். அதன் பின் கதிர் மற்றும் செந்தில் இவரை வீட்டிற்கு கூட்டிட்டு போயிருக்கிறார்கள். பின்பு கதிர் இவருடைய அம்மாவிடம் பாசம் பாசம் சும்மா இதையே வச்சு பேசி எல்லாத்தையும் கட்டிப்போட்டு விட்டீர்கள். இதனால் பாதிக்கப்படுவது நீங்கள் இல்லை. நாங்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று கதிர் கோவமாக பேசுகிறார்.

Also read: குடியும் குடித்தனமாய் குடும்பத்தை வழிநடத்தும் மூர்த்தி.. கண்மூடித்தனமாக அப்பா மீது பாசத்தை கொட்டும் மகன்கள்

ஆக மொத்தத்தில் சரவணனின் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார் பாண்டியன் . இதனை அடுத்து இன்னும் செந்தில் மீனாவை காதலிக்கும் விசயம் தெரிந்து விட்டால் அதற்கு என்ன செய்யப் போகிறாரோ. ஆனால் செந்தில் தொடை நடுங்கியாக இருப்பதால் மீனா களத்தில் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சீசன் 1லும் மீனாதான் போராடி அவருடைய காதலை கைப்பற்றினார்.

அதே மாதிரி வீட்டை எதிர்த்து சண்டை போட்டாவது செந்தில் கூட சேர்ந்து விடுவார். அதனால் மீனாவிடம் பாண்டியனின் ஜம்பவம் பலிக்காது. மேலும் மீனா வீட்டிற்கு வந்த பிறகுதான் பாண்டியனின் கொட்டத்தை அடக்குவார். இதற்கிடையில் அவ்வப்போது பங்காளிடம் சண்டை போட்டுக் கொண்டு வருகிறார். இவர் ஏன் கோபப்படனும் என்பதுதான் புரியவே இல்லை. சக்திவேல் மற்றும் முத்துவேல் கோபப்பட்டால் கூட ஒரு நியாயம் இருக்கிறது.

ஏனென்றால் அவர்கள் ஆசை ஆசையாக வளர்த்த ஓத்த தங்கச்சியை திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணினதற்காக அவர்கள் கோபப்படுகிறார்கள். ஆனால் சம்பந்தமே இல்லாமல் பாண்டியன் கத்துறதும் சண்டை போடுவதும் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. அடுத்தபடியாக கதிருக்கு ஜோடியாக மாமா பொண்ணே ராஜியை தான் கோர்த்து விடப் போகிறார்கள். இதனால் மறுபடியும் குடும்பத்திற்குள் பூகம்பம் வெடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Also read: அப்பத்தாவின் முன் முதலைக்கண்ணீர் வடிக்கும் குணசேகரன்.. வாடி வாசலை தாண்டி சீரும் காளையாக மாறிய மருமகள்கள்