அப்பத்தாவின் முன் முதலைக்கண்ணீர் வடிக்கும் குணசேகரன்.. வாடி வாசலை தாண்டி சீரும் காளையாக மாறிய மருமகள்கள்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து விட்டு வீட்டிற்கு வந்த குணசேகரன் மேற்கொண்டு சடங்கு சம்பிரதாயத்தை செய்ய நினைக்கிறார். ஆனால் அப்பத்தா இறக்கவில்லை. நீங்க சொல்றதெல்லாம் நம்ப முடியாது அதனால எந்த சம்பிரதாயமும் இங்கே நடக்கக்கூடாது என்று ஜனனி முட்டுக்கட்டை போட்டார்.

ஆனால் அதெல்லாம் முடியாது இது என் வீடு என்னுடைய இஷ்டப்படி தான் எல்லாம் நடக்கும். உனக்கு விருப்பம் இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று குணசேகரன் சொல்லிவிட்டு அப்பத்தாவிற்கு செய்ய வேண்டிய எல்லா காரியத்தையும் செய்து முடிக்கிறார். உடனே ஜனனி இதில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லி வெளியே போய் நிற்கிறார். இவரை தொடர்ந்து மற்ற மருமகள்களும் ஜனனிக்கு சப்போர்ட்டாக போய் நிற்கிறார்கள்.

ஆனால் இதையெல்லாம் பார்த்து கண்டுக்காத குணசேகரன் அவர் நினைத்த விஷயத்தை செய்து முடித்து விட்டார். அத்துடன் அப்பத்தாவின் புகைப்படத்திற்கு முன் பாலில் தூக்கு மாத்திரை கலந்து கொடுத்ததே நினைத்து பார்க்கிறார். உடனே அவரை நினைத்து முதலை கண்ணீர் வடித்து அழுகிறார்.அதன் பின் வீட்டிற்குள் வந்த மருமகள்கள் அப்பத்தாவின் படத்திற்கு முன் நின்று சோகத்தை காட்டுகிறார்கள்.

Also read: அடிபட்ட பாம்பாக நிற்கும் குணசேகரன்.. அப்பத்தாவால் மருமகளுக்கு ஏற்பட்ட விடிவுகாலம்

இதனை அடுத்து ஜீவானந்தம் ஜெயிலுக்கு போவதற்கு முன் ஈஸ்வரிடம் நாளைக்கு உங்களை தேடி ஒரு ஆஃபர் வரும் அதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். அதன்படி ஈஸ்வரிக்கு கல்லூரியில் வேலை பார்ப்பதற்காக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்துவிடுகிறது. இதை பார்த்ததும் அங்கு இருக்கும் மருமகள்கள் அனைவரும் சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள்.

ஆனால் குணசேகரனை எதிர்த்து எப்படி வேலைக்கு போக முடியும் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. இருந்தாலும் ஈஸ்வரியின் தன்னம்பிக்கையான பேச்சு தற்போது வெளி வருகிறது. அதாவது என்னை யாரும் தடுக்க முடியாது. யார் என்ன சொன்னாலும் இந்த வேலைக்கு நான் போய் என்னை நிரூபித்துக் காட்டுவேன் என்று சபதம் போடுகிறார். இதனைத் தொடர்ந்து மற்ற மருமகள்களும் அவர்கள் நினைக்கும் வேலையே செய்யப் போகிறார்கள்.

அடுத்தபடியாக குணசேகரன் தம்பிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது கரிகாலனும் வருகிறார். அப்பொழுது கரிகாலன் குணசேகரனை பார்த்து, சத்தம் கேட்டது என்னமோ உண்மைதான். ஆனால் அது எப்படி துப்பாக்கி சூடு என்று உங்களுக்கு தெரியும் என்று கரெக்டா பாயிண்டை பிடித்து கேட்கிறார். இந்த கேள்வியை கேட்டதும் குணசேகரன் திருதிருவென்று முழிக்கிறார். ஆக மொத்தத்தில் இந்த பிளான் அனைத்திற்கும் குணசேகரன் தான் காரணம் என்பது தெரிகிறது. அதே மாதிரி அப்பத்தா இறக்கவில்லை ஜீவானந்தம் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார் என்பதும் உண்மையானது.

Also read: பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக நிற்கும் சக்காளத்தி.. கோபியின் மகன்களின் வாழ்க்கையை சரி செய்யப் போகும் ராதிகா