வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குடியும் குடித்தனமாய் குடும்பத்தை வழிநடத்தும் மூர்த்தி.. கண்மூடித்தனமாக அப்பா மீது பாசத்தை கொட்டும் மகன்கள்

Pandian Stores Season 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 நாடகத்தை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். அதற்கு காரணம் குடும்பத்துடன் பார்க்கும் படியான கதையும், அப்பா மகன்களின் பாசங்களை ஹைலைட்டாக காட்டி மக்களை ஈர்த்து வருகிறது. ஆனாலும் மூர்த்தி இதில் அப்பா கேரக்டரில் நடிப்பதினால் ரொம்பவே கண்டிப்பாகவும், அடாவடியாகவும் நடந்து கொள்கிறார்.

அந்த வகையில் பிள்ளைகளின் ஆசையைக் கூட சொல்ல முடியாத அளவிற்கு அவர்களை அடக்கி ஹிட்லர் மாதிரி நடந்து கொள்கிறார். அது மட்டும் இல்லாமல் கடைசி மகனாக இருக்கும் கதிரை எப்ப பாத்தாலும் குறை சொல்லிக்கொண்டு திட்டிக்கொண்டே வருகிறார். அப்படிப்பட்ட இவர் மனைவியின் பாசத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டு அன்பான கணவராக நடந்து கொள்கிறார்.

அதாவது மூர்த்தியின் மனைவி கோமதிக்கு பிறந்தநாள் என்பதால் சர்ப்ரைஸ் காட்டும் விதமாக புடவையை பரிசளித்து இருக்கிறார். அத்துடன் கோவிலுக்கு கூட்டிட்டு போயி அர்ச்சனை பண்ணி எல்லாருக்கும் பிரசாதம் கொடுக்கிறார். அதே நேரத்தில் தங்கையின் பிறந்த நாளுக்காக கோவிலில் அர்ச்சனை செய்ய சக்திவேல் மற்றும் முத்துவேல் வந்திருக்கிறார்கள். இவர்களை பார்த்ததும் கோமதி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறார்.

Also read: அப்பத்தாவிற்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் ஜீவானந்தம்.. குணசேகரனுக்கு தண்ணி காட்டப் போகும் மருமகள்கள்

அதன் பின் மூர்த்தி பகலில் என்னதான் பொறுப்பான அப்பாவாக இருந்தாலும், ராத்திரியில் குடி இல்லாமல் தூங்கப் போக மாட்டார். அந்த வகையில் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரது முன்னாடியும் தினமும் குடித்துக் கொண்டு இவருடைய காதல் லீலைகளை மகன்களிடம் சொல்லிக் கொள்வார். அப்பொழுது கடைசி மகன் கதிர் நீங்கள் மட்டும் காதலிச்சு கல்யாணம் பண்ணி சந்தோசமாக வாழலாம்.

இதுவே உங்க பையன் காதலிச்சா மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார். உடனே மூர்த்தி பெரிய பையனை கூப்பிட்டு நீ அந்த பொண்ண நெனச்சு வருத்தப்படுறியா என்று கேட்கிறார். அதற்கு சரவணன் இல்லப்பா நீங்க என்ன செஞ்சாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று கண்மூடித்தனமான அன்பை கொட்டுகிறார்.

இதை புரிந்து கொள்ளாத மூர்த்தி உங்களுக்கு அப்பா அம்மா நாங்க இருக்கிறோம். எந்த நேரத்தில் என்ன பண்ண வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என வழக்கம்போல் கதிரிடம் கோபத்தைக் காட்டி போய் விடுகிறார். ஆனால் பெரிய பையனின் காதலுக்கு தடங்கலாக இருக்கும் மூர்த்தி, எப்படி இரண்டாவது மகன் செந்தில் மீனா காதலுக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டப் போகிறார் என்பது தான் விறுவிறுப்பான கதையாக இருக்கும்.

Also read: பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக நிற்கும் சக்காளத்தி.. கோபியின் மகன்களின் வாழ்க்கையை சரி செய்யப் போகும் ராதிகா

- Advertisement -

Trending News