ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

டாம் அண்ட் ஜெர்ரியாக இருந்த கதிர், ராஜிக்குள் புகுந்த ரொமான்ஸ்.. கல் மனசாக பரிதவிக்கவிட்ட பாண்டியன்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, ராஜி மற்றும் கதிரின் திருமணத்திற்கு பிறகு நாடகம் ரொம்பவே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.  டாம் அண்ட் ஜெர்ரியாக சண்டை போட்டுக் கொண்டிருந்த கதிர் மற்றும் ராஜி தற்போது கணவன் மனைவியாக மாறியது ரொம்பவே நன்றாக இருக்கிறது.

அந்த வகையில் இவர்களுடைய சண்டையை பார்க்கும் பொழுது சுவாரசியமாகவும், இவர்களுடைய கதை தான் நன்றாக இருக்கு என்று சொல்வதற்கு ஏற்ப மக்கள் மனதை வென்று விட்டார்கள். இதனை தொடர்ந்து வருகிற எபிசோடில், கதிர் தன் தங்கையை ஏமாற்றி நகையும் பணத்தையும் பறித்துக் கொண்டார் என்ற கோபத்தில் ராஜியின் அண்ணன் கதிர் தனியாக வரும் பொழுது அடியாட்களை வைத்து கண்ணுமுன்னு தெரியாமல் அடித்து விடுகிறார்.

காயத்துடன் வீட்டிற்கு வந்த கதிரை பார்த்து கோமதி வழக்கம்போல் கண்ணீரை விட்டு நடிப்பு பாயாசத்தை போட்டு விட்டார். அத்துடன் பாண்டியன் வரும்போது, பாருங்க எப்படி அடிச்சிருக்காங்க என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன் கண்டுகொள்ளாமல் கல் மனசாக நின்னு வேற வேலை இருந்தா போய் பாரு என்று சொல்லி கதிரை பரிதவிக்க விட்டுவிட்டார்.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

மேலும் கதிர் காயத்துடன் தனியாக இருக்கும் பொழுது ராஜி மன்னிப்பு கேட்கிறார். அத்துடன் ரொம்ப வலிக்குதா என்று அக்கறையாகவும் பாசத்துடனும் கேட்கிறார். அதற்கு கதிர் வேதனையில் இல்ல இல்ல ரொம்ப சுகமாக இருக்கிறது என்று சொல்கிறார். நான் கூட உங்க அண்ணன் தங்கச்சி மேல இருக்க பாசத்துல தான் என்னை அடிக்கிறான் என்று நினைத்தேன்.

ஆனால் அவனுக்கு உன் மேல் எல்லாம் துளி கூட பாசம் இல்லை. என்னை அடித்தது நகை பணம் எங்கே என்று கேட்டு கேட்டு தான் அடிச்சான். அவனுக்கு உன்ன பத்தி எல்லாம் கொஞ்சம் கூட கவலையே இல்லை, அந்த நகையால் எல்லாரும் முன்னாடியும் நான்தான் கெட்ட பேர் வாங்கி இருக்கிறேன். இது எல்லாத்துக்கும் காரணம் உன்னால் தான் என்று கோபத்துடன் கதிர் சொல்கிறார். இதை கேட்டு ராஜி குற்ற உணர்ச்சியால் அழுது கொண்டிருக்கிறார்.

இப்படித்தான் முதலில் ஆரம்பிக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறி ராஜி மற்றும் கதிர் தான் பெஸ்ட் ரொமான்ஸ் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு நடிப்பை பிரமாதமாக கொடுக்கப் போகிறார்கள். அந்த வகையில் இவர்களுக்காகவே இந்த நாடகத்தை பார்க்க வேண்டும் என்று மக்கள் மனதில் ஒரு எண்ணம் வர ஆரம்பித்து விட்டது. மேலும் கூடிய விரைவில் விஜய் டிவி இந்த நாடகத்தின் மூலம் டிஆர்பி-யில் முதல் இடத்திற்கு வந்துவிடும்.

Also read: மனோஜ் மூலம் ரோகினிக்கு பெரிய ஆப்பை வைக்கும் விஜயா.. குதூகலத்தில் கொண்டாடும் முத்து

- Advertisement -

Trending News