பாண்டியன் ஸ்டோர்ஸை அம்போவென விட்ட மருமகள்.. எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல், ரியாலிட்டி ஷோ என அனைத்திற்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் வருடக்கணக்காக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக இன்னும் ஒளிபரப்பாகி வருகிறது.

அடிக்கடி சீரியலில் நடிக்கும் கேரக்டர்கள் மாற்றப்பட்டு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்சுக்கு டிஆர்பி-யில் நல்ல இடமும் கிடைத்து வருகிறது. ஆனால் இப்போது ஆணிவேரே ஆட்டம் காணும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை கட்டி காத்து வரும் மூத்த மருமகள் சீரியலை விட்டு விலக இருக்கிறாராம்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஏற்பட்ட சிக்கல்.. விஜய் டிவியின் பாலிடிக்ஸ், ஒத்து ஊதும் இரண்டு பிரபலங்கள்

அந்த வகையில் தனம் என்ற கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் நடித்து வரும் சுஜிதா ஏற்கனவே சீரியலை விட்டு விலக உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு சம்பள பிரச்சனை ஒரு காரணம் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தயாரிப்பு தரப்பு அவருக்கான சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுத்தது.

இதனால் அவர் சீரியலை விட்டு விலக மாட்டார் என்று ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் இப்போது அவர் சீரியலை அம்போ என விட்டுவிட்டு பிக்பாஸ் பக்கம் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். விஜய் டிவியில் கடந்த 6 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தன்னுடைய 7வது சீசனை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது.

Also read: குணசேகரன் தலையில் இடியை இறக்கிய ஈஸ்வரியின் அப்பா.. மனுஷன் சொத்து போனதுக்கு கூட இந்த அளவுக்கு கலங்கலையே

அதற்கான ப்ரோமோ வீடியோ கூட வெளிவந்த நிலையில் இதுவரை இல்லாத ட்விஸ்ட் ஆக இந்த முறை 2 வீடு, 20 போட்டியாளர்கள் என்ற அறிவிப்பு வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதன்படி ரேகா நாயர், காக்கா முட்டை விக்னேஷ், பப்லு பிரித்விராஜ், மாகாபா ஆனந்த், பார்வதி நாயர், சோனியா அகர்வால், ஜாக்குலின் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த பட்டியலில் தற்போது சுஜிதாவும் இணைந்துள்ளார். கமலின் தீவிர ரசிகையான இவர் இப்படி ஒரு வாய்ப்பு வரும் போது அதை எப்படி வேண்டாம் என்று சொல்வார். அதனாலயே அவர் இப்போது தனக்கு மிகப்பெரும் ஆதரவை கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை டீலில் விட்டிருக்கிறார். அந்த வகையில் பிக்பாஸ் எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

Also read: கோபியை தோற்கடிக்க துணிஞ்சு களத்தில் இறங்கிய பாக்கியா.. துணிந்தவர்க்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தையாம்

- Advertisement -