வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பாண்டியன் ஸ்டோர்ஸில் வெடிக்கும் சக்காளத்தி சண்டை.. கோபத்தை கக்கும் கதிர் 

Pandian Stores 2 Today Episode: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதிக்காகவே கதிர் ராஜியை திருமணம் செய்து கொண்டார். ஆனா எப்படி எலியும் பூனையுமாய் இருந்த கதிர்- ராஜி காதலித்து திருமணம் செய்து கொள்ள முடியும் என வீட்டில் இருப்பவர்கள் தலையை பிச்சுக்கிட்டு இருக்கிறார்கள்.

அவர்களை எல்லாம்  சமாளிக்க முடியாமல் திணறும் கதிரை அவ்வபோது மீனாதான் வந்து காப்பாற்றி விடுகிறார். அப்படித்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்தபோது செந்தில் மனைவி மீனாவின் மீது கோமதி கோபத்தை கொட்டினார். ஆனால் அதே காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்த ராஜியை எதுவுமே சொல்ல மாட்டேங்கிறீர்களே! என்று செந்தில் கேட்கிறார்.

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் கோமதி முழிக்கிறார். உடனே மீனா, ‘காரணம் இருக்கிறது. என்னதான் ராஜி கதிர் உடைய மாமா பொண்ணு. நான் இந்த வீட்டில் யாரோ தானே! அதனால் தான் அத்தை என் மீது  கோபப்பட்டு இருக்கிறார்’ என்று சக்காளத்தி சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார். இப்படி மீனா பேசுவது ஒரு பக்கம் கோமதியை காப்பாற்றி விடுவதற்காக இருந்தாலும், அவரது மனதில் இருப்பதை  சட்டென என்று சொல்லிவிட்டார்.

Also Read: நொறுங்கிப் போக வைத்த தர்ஷினியின் வாக்குமூலம்.. மாரடைப்பு வர வைத்த எதிர்நீச்சல் ஜீவானந்தம்

சக்காளத்தி சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்ட மீனா

இனிமேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மருமகளான நுழைந்த மீனா, ராஜி இருவருக்கும் இடையே போட்டி, பொறாமை ஏற்படப்போகிறது. இதை தானே காலாகாலமாக சீரியலில் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அதேபோல், தனக்காக தான் கதிர் திருட்டுப் பழியை தன் சுமந்து கொண்டிருக்கிறார் என நினைத்து ராஜி அவரிடம் சென்று பேசி மன்னிப்பு கேட்க நினைக்கிறார்.

ஆனால் ராஜியை முகத்துக்கு நேருக்கு நேராக பார்த்ததும் கதிர் தன்னுடைய கோபத்தை கக்குகிறார். பிடிக்காத திருமணத்தை செய்து கொண்டு பல புதிர்கள் நிறைந்த வாழ்க்கையில் இருக்கக்கூடிய ராஜி, தன்னுடைய தந்தை வீட்டின் முன்பு ஏதாவது ஆறுதல் கிடைக்குமா என ஏக்கத்துடன் பார்க்கிறார். ஜன்னல் வழியாக அவருடைய தந்தை சக்திவேலும் பார்க்க, ரொம்பவே செண்டிமெண்டாக காட்டுகின்றனர். இதில் ராஜியை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது.  இருந்தாலும் உப்பு தின்றவன் தண்ணி குடிச்சு தானே ஆகணும்.

Also Read: தம்பி பேச்சைக் கேட்டு முத்துவை சரமாரியாக கேள்வி கேட்கும் மீனா.. விஜயா ஆசைப்படி பிரிய போகும் ஜோடி

- Advertisement -

Trending News