சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நொறுங்கிப் போக வைத்த தர்ஷினியின் வாக்குமூலம்.. மாரடைப்பு வர வைத்த எதிர்நீச்சல் ஜீவானந்தம்

Ethirneechal Serial: எதிர்நீச்சல் சீரியலில் கடந்த சில வாரங்களாகவே தர்ஷினி பற்றிய பஞ்சாயத்து தான் ஓடிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தர்ஷினியின் கடத்தல், குணசேகரனின் சூழ்ச்சி, வீட்டு மருமகள்கள் காவல் நிலையத்தில் இருப்பது போன்ற காட்சிகள் பதற வைத்தது.

அதிலும் காவல் நிலையத்தில் பெண்கள் அடி வாங்கும் காட்சிகள் பதைபதைக்க வைத்தது. அதை தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரன் வீட்டு பெண்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக சாருபாலா வாதாட வருகிறார்.

இதை பார்க்கும் போதே சீரியல் இனி சுவாரஸ்யமாக மாறும் என தெரிந்தது. ஆனால் தற்போது ஸ்பெஷலாக வெளிவந்திருக்கும் ஒரு ப்ரோமோ மாரடைப்பையே வரவைத்து விடும் போலிருக்கிறது. அந்த அளவுக்கு இயக்குனர் ட்விஸ்ட் வைத்திருக்கிறார். அதில் பல நாட்களாக தேடி வந்த தர்ஷினி வீடியோ கால் மூலம் வாக்குமூலம் கொடுக்கிறார்.

Also read: முத்துவை கேவலமாக மட்டம் தட்டி அசிங்கப்படுத்திய மச்சான்.. தம்பியின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மீனா

பெண் கிடைத்து விட்டாலே என்ற மகிழ்ச்சியில் இருக்கும் ஈஸ்வரி அவருடைய வாக்குமூலத்தை பார்த்து அதிர்வதும், மற்ற மருமகள்கள் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருப்பதுமாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் போதே புரிகிறது தர்ஷினி என்னை கடத்தியது அம்மா மற்றும் சித்திகள் என்றுதான் சொல்லி இருப்பார்.

நிச்சயம் இதற்கு பின்னணியில் குணசேகரன் தான் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு வேளை அப்பத்தாவின் உயிரை காப்பாற்றுவதற்காக கூட தர்ஷினி இப்படி ஒரு வாக்குமூலம் கொடுத்து இருக்கலாம். ஆனாலும் இந்த ப்ரோமோ எப்போது 9 மணி ஆகும் என கடிகாரத்தை பார்க்க வைத்திருக்கிறது.

Also read: மருமகள்களுக்காக ஆஜராகும் சாருபாலா.. குணசேகரன் கண்ணில் தெரியும் மரண பயம்

- Advertisement -

Trending News