கதிரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய பாண்டியன்.. மீனாவை கழட்டி விட நினைத்த தொடை நடுங்கி

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் பார்க்க பார்க்க விறுவிறுப்பாக இருக்கிறது. காரணம் பாண்டியன், அப்பா சென்டிமென்ட் வைத்து பிள்ளைகளை லாக் பண்ணுகிறார். இதில் மாட்டிக் கொண்டு மகன்கள் தவிக்கும் எதார்த்தமான விஷயத்தை கதையாக கொண்டு வருகிறார்கள். இந்த ஒரு விஷயம் பெரும்பாலான குடும்பங்களில் இருப்பதால் மக்களிடம் ஈசியாக ஒத்துப் போய் விடுகிறது.

ஆனாலும் பாண்டியன் குடும்பத்தில் கடைசி மகன் கதிர் மட்டும் அப்பாவிடம் பாசமாக இருந்தாலும் நியாயமாக நடக்க வேண்டிய விஷயங்களில் துணிச்சலுடன் எதிர்த்துப் பேசுகிறார். இதனால் செந்தில் மீனா காதலிக்கிறார்கள் என்பதை தெரிந்ததால் அவர்களுடைய காதலை கல்யாணத்தில் முடித்து வைத்து விட்டார். அத்துடன் இந்த தம்பதிகளை வீட்டிற்கு கூட்டு வந்து விடுகிறார் கதிர்.

இதை கொஞ்சம் கூட எதிர்பாராத பாண்டியன் அதிர்ச்சியாகி வழக்கம்போல் கோபத்தில் கத்துகிறார். அதற்கு செந்தில் என்ன மன்னிச்சிடுங்க அப்பா என்று கெஞ்சுகிறார். ஆனால் இதை காது கொடுத்து கேட்காத பாண்டியன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுகிறார். உடனே எதிரே இருக்கும் பங்காளி வீட்டில் இருக்கும் அனைவரும் நக்கலாக பார்த்து சிரிக்கிறார்கள்.

Also read: சத்தியத்தை மறந்து கல்யாணம் பண்ணிய செந்தில் மீனா.. பாண்டியன் எடுக்கப் போகும் முடிவு இதுதான்

அதற்கு பாண்டியன் இந்த மாதிரி ஒரு அசிங்கத்தை வாங்கி தருவதற்கு தான் நீ கல்யாணத்தை பண்ணிட்டு வந்தியா என்று கத்துகிறார். இந்த நேரத்தில் கதிர், கல்யாணத்தை பண்ணி வைத்து கூட்டிட்டு வந்தது நான் தான் என்று சொல்கிறார். சும்மாவே பாண்டியன் இருக்கக் கோபத்தை கதிர் மேல தான் காட்டுவார். இதுல இவன் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று தெரிந்ததும் பாண்டியன் கதிரை வெளுத்து வாங்குகிறார்.

இதை பார்த்த செந்தில், அப்பாவிடம் இருக்கும் பயத்தால் தொடை நடுங்கியாக மாறி அப்பா நான் வேண்டுமென்றால் மீனாவை அவளுடைய வீட்டிலேயே விட்டுட்டு வரேன் என்று மனசாட்சியே இல்லாமல் கழட்டி விட பார்க்கிறார். இதை கேட்ட பாண்டியன் ஒரு பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு கூட்டிட்டு வந்து இப்போ திரும்ப அனுப்பிவிட்டு வரேன்னு சொல்ற நீ எல்லாம் மனுசனா என்று கேட்கிறார்.

அடுத்து உன்னை நம்பி வந்த இந்த பிள்ளை உன்கூட இருக்குதுனால உன்னை நான் வீட்டுக்குள்ள சேர்கிறேன் என்று செந்தில் மீனாவை பாண்டியன் உள்ளே சேர்க்கிறார். ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் கதிரை வீட்டுக்குள்ளேயே சேர்க்க மாட்டேன் என்று கதிரை அடித்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுகிறார். ஆக மொத்தத்தில் தப்பு செய்தவர் ஒருத்தர் சப்போர்ட் பண்ணவர் கடைசியில் தண்டனை அனுபவிக்கும் மாறி ஆகிவிட்டது.

Also read: மகனின் வாழ்க்கையை வஞ்சகத்தால் வீணாக்கிய பாண்டியன்.. கேள்விக்குறியாக நிற்கும் மீனாவின் காதல்?