பாக்கியாவின் சந்தோஷத்திற்காக பழனிச்சாமி எடுத்த விபரீதம்.. கோபியை நம்பியே ஈஸ்வரிக்கு ஏற்பட்ட அவமானம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை நம்பியதால் என்ன நடக்கும் என்பதை ஈஸ்வரி உணரும் நேரம் நெருங்கி விட்டது. அதாவது ஈஸ்வரி வந்தது பிடிக்காததால் ராதிகா மற்றும் அவருடைய அம்மா மறைமுகமாக குடைச்சல் கொடுக்கிறார். அதை தாக்கு பிடிக்காத ஈஸ்வரி ஒவ்வொரு முறையும் கோபியிடம் புலம்புகிறார்.

ஆரம்பத்தில் அம்மாக்கு சப்போர்ட் பண்ணிய கோபி போக போக எரிச்சல் படும் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக வெறுத்து வருகிறார். அத்துடன் இன்னொரு பக்கம் ராதிகா, கோபிக்கு கெடுவைத்து சீக்கிரமாக உங்களுடைய அம்மாவை பாக்கியா வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்லுகிறார்.

இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்த கோபி, பாக்கியாவை பார்த்ததும் எப்படியாவது அம்மாவை வீட்டிற்கு கூட்டிட்டு நீ போய்விடு. அங்கே தினம் தினம் சண்டை சச்சரவு என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று கெஞ்சுகிறார். அதற்கு அதெல்லாம் முடியாது நான் ஏன் கூப்பிடனும் உங்க அம்மாவை நீங்கள் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று பாக்யா சொல்லிவிடுகிறார்.

பாக்யாவிற்கு கவச குண்டலமாக இருக்கும் பழனிச்சாமி

பிறகு பாக்கியா, அத்தைக்கு பிடித்த உணவுகளை சமைத்து கோவிலில் போய் கொடுத்து சாப்பிட வைக்கிறார். இதைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரமாக பேசிக்கொண்டு வருகிறார்கள். அப்பொழுது கோபி இருவரையும் பார்த்தவுடன் அம்மாவை காரில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு போய்விடுகிறார். இதனை தொடர்ந்து உச்சகட்ட பிரச்சனையாக ராதிகா மற்றும் அவருடைய அம்மா மூலம் ஈஸ்வரிக்கு பிரச்சினை வரப்போகிறது.

அப்பொழுது கோபி, ராதிகாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசி அம்மாவை அவமானப்படுத்தி நோகடிக்க போகிறார். பிறகு வழியில்லாமல் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் பாக்யா மாமியாரை தன்னுடன் அழைத்துக் கொண்டு போகப் போகிறார். அடுத்ததாக ஜெனி கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாக மாறிக்கொண்டு செழியனை சந்தேகப்பட்டு வருகிறார்.

இதனால் செழியன் சந்தோஷம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் கவலையுடன் நாட்களை ஓட்டிக்கொண்டு வருகிறார். கடைசியில் ஜெனியின் டார்ச்சரை தாங்க முடியாமல் செழியன் விபரீதமான முடிவை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக பாக்கியா ஹோட்டல் பக்கத்தில் பார் ஷாப் இருப்பதால் ஒட்டுமொத்த வேலை ஆட்களும் புலம்பி வருகிறார்கள்.

அப்பொழுது பழனிச்சாமிடம் சொல்லிய நிலையில், பழனிச்சாமி பார் ஓனருக்கு ஆதரவாக பேசும் விதமாக சமைக்கும் ஆர்டரை வாங்கி கொடுத்தார். ஆனால் பின்னாடியே ஒரு ஆப்பையும் வைத்து விட்டார். அதாவது பாக்யாவின் சந்தோஷத்திற்காக பக்கத்தில் இருந்த பார் ஷாப்பை மூடுவதற்கு மறைமுகமாக கம்ப்ளைன்ட் பண்ணி விட்டார்.

அதாவது பார் ஷாப் பக்கத்தில் ஸ்கூல் இருப்பதால் ரொம்பவே கெடுதல் என்று புகார் அளித்ததன் பெயரில் பார் ஷாப் மூடப் போகிறார்கள். அந்த வகையில் பாக்கியாவின் சந்தோஷத்திற்காக எந்த எல்லைக்கும் நான் போக தயார் என்ற அர்த்தத்தில் பழனிச்சாமி ஒவ்வொரு விஷயத்திலும் இறங்கிவிட்டார்.

பாக்கியலட்சுமி சீரியலின் சுவாரசியமான சம்பவங்கள்

- Advertisement -