வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

7 பேரில் இந்த வாரம் வெளியேறப் போகும் பிக் பாஸ் போட்டியாளர்.. சுத்தி சுத்தி செய்யும் மட்டமான வேலை

Bigg Boss Season 7: கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே  விறுவிறுப்படைந்துள்ளது. அதுவும் இந்த முறை பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இருக்கிற18 போட்டியாளர்களையும் இரண்டு குழுக்களாக பிரித்து வைத்திருக்கின்றனர். இந்த இரண்டு வீடுகளிலும் தனித்தனியாக எவிக்சன் ப்ராசஸ் நடத்தப்பட்டு ஏழு போட்டியாளர்களை இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் தேர்வு செய்தனர்.

இந்த ஏழு பேருக்கும் அவர்களுடைய ரசிகர்கள் தங்களது ஓட்டுக்களை திங்கட்கிழமை முதல் கொடுக்க வருகின்றனர். முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ஜோவிகா, யுகேந்திரன், பவா செல்லத்துரை, பிரதீப், ஐஷு, அனன்யா மற்றும் ரவீனா ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் வனிதாவின் மகள் ஜோவிகா மற்றும் இந்த சீசனில் சிறந்த என்டர்டைனராக இருக்கும் ரவீனா இருவருக்கும் ரசிகர்களின் மத்தியில் அதிக ஓட்டுக்கள் கிடைத்திருக்கிறது.

Also Read: கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தால் அவன் என் லவ்வரா? பிக் பாஸில் புது உருட்டை உருட்டும் ரவீனா

கப்பு முக்கியம் பிகிலு என்ற முனைப்புடன் செயல்படும் கவினின் உயிர் நண்பர் பிரதீப் மற்றும் நடிகரும் பாடகருமான யுகேந்திரன் போன்றவருக்கும் ரசிகர்கள் தங்கள் ஆதரவை கொடுத்திருக்கின்றனர். அத்துடன் பிக் பாஸ் வீட்டில் செம ஆக்டிவாக இருக்கக்கூடிய ஐஷு, அனன்யா போன்றோரும் ரசிகர்களிடம் ஓரளவு ஓட்டுக்களை பெற்று எஸ்கேப் ஆகிவிட்டனர்.

கடைசியில் இந்த பிக் பாஸ் வீட்டில் வயதில் மூத்தவராக இருந்தும் கொஞ்சம் கூட பக்குவம் இல்லாமல் இருக்கக்கூடிய பவா செல்லதுரை தான் குறைந்த ஓட்டுக்களை பெற்று முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார். அதிலும்  நேற்று இவர் சொன்ன சர்ச்சைக்குரிய கதை  பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் எரிச்சல் அடைய வைத்தது.

Also Read: 3 பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. சாதுரியமாக காய் நகர்த்தும் வனிதாவின் வாரிசு

அது மட்டுமல்ல பொது இடத்தில் எச்சில் துப்பாதீர்கள் என சொன்னதற்கும், அப்படி தான் செய்வேன்! என்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் நான் நானாகவே தான் இருப்பேன் என திமிரு தனதுடன் பேசுகிறார். பிக் பாஸ் வீட்டைச் சுற்றி ஒரு இடம் கூட பாக்கி இல்லாமல் கண்ட இடமெல்லாம் எச்சி துப்பும் மட்டமான வேலையை  செய்கிறார். அவர் செய்கிறதை பிரதீப் சுட்டிக்காட்டியும் மாற்றிக் கொள்ள முடியாது என அகம்பாவத்துடன் சொல்வது ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல என ரசிகர்கள் இவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவெடுத்தனர்.

வயதில் மூத்தவராக இருந்து கொண்டு இளம் தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக பவா செல்லதுரை இருக்க தவறிவிட்டார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு எழுத்தாளராக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் இவருக்குள் இருக்கும் டார்க்னஸ் இப்போது வெட்ட வெளிச்சம் ஆயிருச்சு. இதனால்தான் நாமினேட் செய்யப்பட்ட ஏழு போட்டியாளர்களுள் மிகக் குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை கமல் முன்னிலையில் வெளியேற போகிறார்.

Also Read: விஜய் டிவி மானமே உங்க கையில தான் இருக்கு.. 18 போட்டியர்களின் சம்பள விவரத்தை கசிய விட்ட பிக்பாஸ்

- Advertisement -

Trending News