சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எந்த ஹீரோவுமே வேண்டாம், தனி ஆளா கெத்து காட்டிய நயன்தாரா.. கோடியில் வசூலை குவித்த 4 படங்கள்

Nayanthara Movie: எத்தனையோ முன்னணி நடிகைகள் சினிமாவில் வலம் வந்தாலும் நயன்தாராவுக்கு இருக்கும் தனி வரவேற்பே வேற லெவலாக இருக்கும். அதுவும் திருமணமாகி இரண்டு குழந்தைக்கு அம்மாவாகிய பின்பும் ஹீரோயினாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அது இவருடைய நடிப்பின் சாமர்த்தியம் தான் என்று சொல்லியாக வேண்டும்.

அந்த அளவிற்கு இவரிடம் நடிப்பின் திறமையும் அனைவரையும் இழுக்கும் காந்த சக்தியும் இருக்கிறது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இவருடைய படங்களில் எந்த ஹீரோவுமே வேண்டாம், என்னால் தனி ஆளாகவே நின்னு நடிக்க முடியும் என்று கெத்து காட்டி நடித்து இருக்கிறார்.

Also read: புலியை பார்த்து சூடு போட்ட பூனை.. கெத்து காட்டும் நயன்தாரா, அதல பாதாளத்திற்குச் சென்ற த்ரிஷா

அதுவும் சும்மா சாதாரண படமாக இல்ல முதல் நாள் கலெக்ஷனை கோடியில் லாபத்தை பார்த்திருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம். அந்த வகையில் நெல்சன் இயக்குனராக அடி எடுத்து வந்த முதல் படமே நயன்தாராவுடன் கமிட்டாகி கொடுத்த படம் தான் கோலமாவு கோகிலா. இதில் ஹீரோ என்று யாரையும் வைக்காமல், காமெடி நடிகர் யோகி பாபு வைத்து மட்டுமே படத்தை கொஞ்சம் கூட பிசிரு தட்டாமல் நடித்திருக்கிறார்.

முக்கியமாக இதில் நடித்த ஒவ்வொரு காட்சிகளிலுமே நயன்தாரா ரொம்பவே பர்ஃபெக்சன் ஆகவும் எதார்த்தமான நடிப்பையும் கொடுத்திருப்பார். அதனால் தான் என்னமோ இப்படம் முதல் நாள் வசூலில் 3.47 கோடி லாபத்தை பார்த்து இருக்கிறது. மொத்தமாக இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 72 கோடி லாபத்தை பார்த்திருக்கிறது. இதனை தொடர்ந்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் திரில்லர் கதையை மையமாக வைத்து மாயா என்ற படத்தில் நயன்தாரா அவருடைய நடிப்பை கொடுத்து அனைவரையும் மிரள விட்டிருப்பார்.

Also read: ஜெயம் ரவி, நயன்தாரா போதைக்கு ஊறுகாய் ஆன இறைவன்.. ஏட்டிக்கி போட்டியா வசூலித்த பொன்னியின் செல்வன்

முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டுமே 2கோடி லாபத்தை பெற்றிருக்கிறது. இப்படத்தின் மொத்த கலெக்ஷன் 23 கோடி. அடுத்ததாக கலெக்டர் கேரக்டரில் நடித்து கிராமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தைரியத்துடன் தீர்க்கும் பொறுப்பில் அறம் படத்தில் நடித்து சமூக கருத்துக்களை முன்வைத்து கொடுத்திருப்பார். இப்படத்தின் முதல் நாள் வசூல் 1.58 கோடி லாபத்தை அடைந்திருக்கிறது. இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 14 கோடி.

அடுத்ததாக கடந்த வருடம் வெளிவந்த கனெக்ட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ஆன லாபம் 1.25 கோடி. இப்படி இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவமான கதாபாத்திரத்தை தனி ஆளாக நடித்து கோடிக்கணக்கில் லாபத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார். இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 20 கோடி. இதில் முக்கியமான ஒரு விஷயம் என்றால் எந்தவித ரிவியூருக்கு பணத்தை கெடுத்தோ அல்லது சமூக வலைதளங்களில் பிரமோஷன் பண்ணியும் லாபத்தை பார்க்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

Also read: 50 வினாடி விளம்பரத்திற்கு நயன்தாரா வாங்கும் பல கோடி சம்பளம்.. அழகு இருக்கிற வரை கல்லா கட்டிக்க வேண்டியது தான்

- Advertisement -

Trending News