வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஜெயம் ரவி, நயன்தாரா போதைக்கு ஊறுகாய் ஆன இறைவன்.. ஏட்டிக்கி போட்டியா வசூலித்த பொன்னியின் செல்வன்

Iraivan Movie: ஜெயம் ரவி, நயன்தாரா லீட் ரோலில் நடித்த சைக்கோ திரில்லர் படம்தான் இறைவன். இந்தப் படம் கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் எதிர்பார்த்த அளவு படத்திற்கு வசூல் கிடைக்காமல் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதற்கெல்லாம் முழு காரணமும் ஜெயம் ரவி தான் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஏனென்றால் தனி ஒருவன் படத்திற்கு பிறகு இறைவன் படத்தின் மூலம் ஜெயம் ரவி, நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரி இறைவன் படத்திலும் ஒர்க்கவுட் ஆகும் என நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த படத்தின் டிரைலர் எல்லாம் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. இதற்கு முன்பு ஜெயம் ரவியின் பொன்னியின் செல்வன் படம் சூப்பர் ஹிட் ஆனதால் அவருடைய அடுத்த படமான இறைவன் படமும் வெற்றி பெறும் என்று நினைத்தார்.

Also Read: போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியாமல் திணறும் சந்திரமுகி 2, இறைவன்.. 5வது நாள் முடிவில் செய்த வசூல்

ஆனால் ஜெயம் ரவி இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசும் போதே இந்த படத்தின் வசூலை குறைத்து விட்டதாக தற்போது படத்தின் தயாரிப்பாளர் கடுப்பின் உச்சத்தில் இருக்கிறார். ரிலீஸுக்கு முன்பே குழந்தைகளுடன் படம் பார்க்க வராதீர்கள் என்று குறிப்பிட்டு படத்திற்கு ரசிகர்களின் கூட்டத்தை குறைத்து விட்டார்.

அதோடு மட்டுமல்லாமல் நயன்தாராவுடன் போட்டி போட்டுக் கொண்டு பேசிய சம்பளத்தை விட அதிகமாகவும் வாங்கி இருக்கிறார். இப்போது இறைவன் படம் படு தோல்வியை சந்தித்ததற்கு நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தான் காரணம் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அடித்து சொல்கின்றனர்.

Also Read: சொந்த செலவில் சூனியம் வைத்த ஜெயம் ரவி.. தூங்கு மூஞ்சி அஸ்வின் போல் உளறிய பரிதாபம்

காரணம் ஜெயம் ரவிக்கு கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு 3 மாதம் படத்தின் சூட்டிங் தள்ளி போனது. அது பத்தாது என்று நயன்தாரா-வும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் இறைவன் படத்தின் ஷூட்டிங்கை 4 முதல் 6 மாதம் தள்ளிப் போட்டார். அதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தின் இயக்குனர் அகமதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படப்பிடிப்பு தள்ளி போனது.

இத்தனை பிரச்சனைகளையும் சமாளித்து ஒரு வழியா படத்தை முடித்தாலும் கடைசி நேரத்தில் ஜெயம் ரவி பேசிய சம்பளத்தை விட 2 கோடி அதிகமாக கேட்டிருக்கிறார். முதலில் ஜெயம் ரவிக்கு 12 கோடி சம்பளம் பேசப்பட்டு அதன் பின் இதன் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் சென்றதால் கூடுதலாக 2 கோடி கேட்டு மொத்தமாக 14 கோடியை கரந்திட்டார். கடைசியில் இறைவன் படம் வசூலில் மண்ணைக் கவ்வியத்துடன் ஜெயம் ரவி, நயன்தாராவின் போதைக்கு ஊறுகாயாக மாறியதுதான் மிச்சம்.

Also Read: ஒரே மாதிரி வெளிவந்த 6 சைக்கோ திரில்லர் ஹிட் படங்கள்.. மொக்கை வாங்கிய பொன்னியின் செல்வன்

- Advertisement -

Trending News