நண்பர் தயாரிப்பில் அஜித் வெற்றி கண்ட 9 படங்கள்.. மூன்று கெட்டப்பில் படைத்த வரலாறு

தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் அஜித். இவர் தன் நண்பரான எஸ் எஸ் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் நடித்து வெளிவந்த படங்கள் இவருக்கு இன்று வரை பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.

மேலும் சிம்பு, விக்ரம் மற்றும் அஜித்தை வைத்து நிக் ஆர்ட்ஸ் பல படங்களை தயாரித்துள்ளது. அதிலும் குறிப்பாக எஸ் எஸ் சக்கரவர்த்தி நட்பு தரப்பில் அஜித்தை வைத்து தயாரித்த 9 படங்களை பற்றி இங்கு காணலாம்.

ராசி: 1997ல் வெளிவந்த ராசி படம் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் தோன்றிய முதல் படம் ஆகும். இப்படம் அஜித்க்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது.

Also Read:பாக்ஸ் ஆபிஸை முதல் நாளிலேயே மிரட்டிய 3 படங்கள்.. டாப் லிஸ்டில் இருக்கும் துணிவு

வாலி:1999ல் அஜித் அவர்கள் இரட்டை வேடத்தில் சிம்ரன் உடன் ஜோடியாக நடித்திருப்பார். இரு வேறுபட்ட கதாபாத்திரத்தில் வரும் அஜித்தின் நடிப்பு இப்படத்திற்கு நல்ல வசூலை பெற்று தந்தது.

முகவரி:2000ல் அஜித் ஜோதிகாவுடன் இணைந்து நடித்த படம் தான் முகவரி. இப்படத்தையும் நிக் ஆர்ட்ஸ் தயாரித்து வெற்றி கண்டது.

சிட்டிசன்: 2001ல் அஜித் மற்றும் எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் வெளிவந்த படம் தான் சிட்டிசன். இப்படத்தில் வரும் உண்மை சம்பவ கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.

Also Read:அஜித்தை திருப்திப்படுத்த முடியாத 4 இயக்குனர்கள்.. மகிழ்திருமேனியால் இழுத்தடிக்கும் ஏகே 62

ரெட்: 2002ல் வெளிவந்த படமான ரெட்-யில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருப்பார் அஜித்.மேலும் இவர் இப்படத்தில் அது என்று சொல்லும் பாவனை ரசிகர்களை கவர்ந்த ஒன்றாகும்.

வில்லன்: 2002ல் வெளிவந்த படம் தான் வில்லன். இதில் இருவேறு கதாபாத்திரத்தில் வரும் அஜித்தின் நடிப்பு அசத்தலாக இருக்கும்.

ஆஞ்சநேயா: 2003ல் மீரா ஜாஸ்மினோடு ஜோடியாக நடித்திருப்பார் அஜித். மேலும் இப்படம் நிக் ஆர்ட்ஸ் இல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படம் போதிய வரவேற்பை வரவில்லை.

Also Read:அஜித்துக்கு சிபாரிசு செய்த விவேக்.. லைஃப் டைம் படமாக ஏகே கொடுத்த பிளாக்பஸ்டர் 

ஜி: இப்படத்தில் திரிஷா மற்றும் அஜித் இணைந்து நடித்திருப்பார்கள். இப்படம் லிங்குசாமி இயக்கத்தில் மற்றும் எஸ் எஸ் சக்கரவர்த்தி அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த படமாகும். மேலும் அஜித் திரிஷா ஜோடி பொருத்தம் அம்சமாக அமைந்திருக்கும்.

வரலாறு: 2006ல் வெளிவந்த இப்படத்தில் அஜித் அவர்கள் மூன்று கெட்டப்பில் நடித்திருப்பார். இப்படத்தில் அஜித்தின் நளினமான நடனம் இடம் பெற்றிருக்கும். மேலும் இப்படம் அஜித்திற்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

Also Read:ஓப்பனிங் நாளிலேயே மண்ணை கவ்விய அஜித் ரீமேக் படம்.. இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்

Next Story

- Advertisement -