ஓப்பனிங் நாளிலேயே மண்ணை கவ்விய அஜித் ரீமேக் படம்.. இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்

அசலை விட போலி பளபளப்பாக இருந்தாலும் ஒரிஜினலை மிஞ்ச முடியாது. அப்படித்தான் இப்போது பலரும் ஹிட் அடித்த படங்களின் ரீமேக் உரிமையை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அது ஒரிஜினல் அளவுக்கு தேறியதா என்று கேட்டால் பல சமயங்களில் இல்லை என்ற பதில் தான் வரும்.

அப்படி ரீமேக் செய்யப்பட்ட அஜித் படம் ஒன்று இப்போது ஓப்பனிங் நாளிலேயே மண்ணை கவ்வி இருக்கிறது. அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணன், தம்பி பாசத்தை மையப்படுத்தி வெளியான திரைப்படம் தான் வீரம். தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான கிஸி கா பாய் கிஸி கி ஜான் இன்று வெளியாகி உள்ளது.

Also read: பான் இந்தியா ஹீரோக்களுடன் நடித்தும் மண்ணை கவ்விய பூஜா ஹெக்டே.. அடி மேல அடி வாங்கிய 4 பிளாப் படங்கள்

சல்மான் கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் இப்போது பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என்னும் அளவுக்கு ரசிகர்கள் நொந்து போய் இருக்கின்றனர். ஏனென்றால் படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படியான சில விஷயங்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது.

அதாவது சண்டை காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஓரளவிற்கு ஆறுதலை தருகிறது. மற்றபடி காதல் காட்சிகள் உட்பட பல காட்சிகள் ரசிகர்களுக்கு சோதனையாகவே அமைந்திருக்கிறது. படம் வெளி வருவதற்கு முன்பே ஒரு பாடல் காட்சி ரசிகர்களிடையே பயங்கரமாக கலாய்க்கப்பட்டு வந்தது. இருந்தாலும் படம் நன்றாக வந்திருக்கும் என நம்பி சென்ற ஆடியன்ஸ் தற்போது ஏமாந்து போய் இருக்கின்றனர்.

Also read: எதிர்பாராத கூட்டணியில் ஏகே 62.. விக்னேஷ் சிவனை தொடர்ந்து மகிழ்திருமேனிக்கும் போட்ட பட்ட நாமம்

ஏற்கனவே தமிழில் மாஸ் ஹிட் அடித்த படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் சொதப்பலை சந்தித்தது. ஆனாலும் பாலிவுட் ஸ்டார்கள் எதற்காக தென்னிந்திய படங்களை ரீமேக் செய்ய வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. பிரம்மாண்டம் என்ற பெயரில் படம் எடுத்து சொதப்பி வரும் அவர்கள் இனியாவது சுதாரித்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

அந்த வகையில் தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வரும் பூஜா ஹெக்டேவுக்கு இப்படமும் சரிவை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே இவரை ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தி வைத்துள்ளனர். அதில் இப்படி அடுத்தடுத்த படங்களும் தோல்வியை பெற்று வருவது அவருக்கான பின்னடைவாக மாறியுள்ளது.

Also read: விஜய்யை பின்னுக்கு தள்ளிய கடைசி 3 படங்கள்.. வினோத்தால் எகிறிய அஜித்தின் மார்க்கெட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்