திரும்புற இடமெல்லாம் AI தொழில்நுட்பம்.. இதோட பயன்பாடுகளை தெரிஞ்சுகோங்க உலகமே உங்க கைல

AI Technology In Various Industry: விஞ்ஞானம் வளர வளர ஆபத்துகளும் நெருங்கிக் கொண்டே இருக்கிறது என்று ஒரு பேச்சு எப்போதுமே நமக்கு பயத்தை கொடுக்கிறது. அதில் ஒரு சின்ன விஷயம் தான் மொபைல். இந்த காலத்துக்கு ஏற்ப புதுமையான விஷயங்களை உருவாக்கி உலகமே நம்முடைய பாக்கெட்டில் இருக்கிறது என்று சில தவறான கண்ணோட்டம் போகிறது. அதாவது எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்.

ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படும். அப்படித்தான் தற்போது புது தொழில்நுட்பம் எங்கு திரும்பினாலும் அது தான் காணப்படுகிறது. அதாவது AI தொழில்நுட்பம், அப்படின்னா என்ன என்றால் செயற்கை நுண்ணறிவு. கணினி மூலமாக உருவாக்கப்படும் மனித நுண்ணறிவு செயல்முறைகள். இதை நிபுணர் அமைப்புகள், இயற்கை மொழி செயலகம் மற்றும் இயந்திர பார்வை என்றும் சொல்லலாம்.

உலகளவில் பல துறைகளில் பயன்படுத்தப்படும் AI டெக்னாலஜி

தற்போது இந்த ஒரு தொழில்நுட்பம் தெரிந்து கொண்டால் போதும் உலகமே உங்கள் கையில் என்று சொல்வதற்கு ஏற்ப திரும்புற இடமெல்லாம் இதுதான் முக்கியமாக தேவைப்படுகிறது. அப்படி இதுல என்ன இருக்கு எங்கெல்லாம் இதை பயன்படுத்துகிறார்கள் என்பதை கொஞ்சம் பார்த்துடலாம்.

சுகாதாரம்: இன்றைய காலகட்டத்தில் AI மூலம் மிகத்துல்லியமாக, வேகமாகவும் நோய்களை கண்டறியலாம். இதை வைத்து எந்தெந்த நோய்க்கு எப்படி மருந்து தயாரிக்க வேண்டும் என்று பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். அத்துடன் தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள் அதாவது X கதிர்கள், MRI மற்றும் CT Scan போன்ற மருத்துவ தரவை நுணுக்கமாக பார்த்திடலாம். அதற்கு தகுந்தது போல் நோயாளிகளுக்கு எந்த மாதிரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக வழங்க முடியும்.

வாகனம்: வாகனத் துறையில் AI என்பது வாகன உலகின் பல பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை செயல்படுத்துவதைக் குறிக்கிறது. AI வாகன உலகில் உள்ள இந்த தொழில்நுட்பங்கள், பாதை திட்டமிடல், வழிசெலுத்தல், பார்க்கிங் போன்ற பல பணிகளை தானியக்கமாக்குகின்றன( self driving) அதே நேரத்தில் செயல்திறன் மற்றும் பாதுகாப்பையும் வழங்குகின்றன.

நிதி: நிதியில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மோசடியை கண்டறிதல், பங்குச்சந்தையை திட்டமிடுதல், தேவையான அறிவார்ந்த தகவல்களை தெரிந்து கொள்வது போன்ற பல நிதி சேவைகளுக்கும் இது ரொம்பவே பயனுள்ளதாக இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் சேவை: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 24/7 முழு ஆதரவையும் வழங்க உதவியாக இருக்கிறது. தேவைக்கேற்ப ஆர்டர்கள் மற்றும் பணத்தை திரும்ப பெறுதல் போன்ற விஷயங்களில் விரைவாகவும் எளிதாகவும் ஆக்குவதற்கு இது ரொம்பவே அத்தியாவசியமாக இருக்கிறது.

பொழுதுபோக்கு: ஊடகம் மற்றும் பொழுதுபோக்கிற்கு ஒரு முக்கியமான பயன்படுத்தல் AI தொழில்நுட்பம். உதாரணத்திற்கு Netflix மற்றும் spotify. இதில் அதிகமாக பயன்படுத்தி பார்க்கும் பார்வையாளர்களுக்கு பரிந்துரை செய்ய பயன்படுகிறது. அத்துடன் விளையாட்டு துறையிலும் இது ரொம்பவே பழக்கத்தில் இருக்கிறது.

உற்பத்தி: உற்பத்தித்திறன் செயல்திறன் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளை அதிகப்படுத்துவதில் இதற்கு முக்கிய பங்கு இருக்கிறது. அத்துடன் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி பண்ணும் பொருள்களை வெளியே அனுப்புவதற்கு முன் அதனுடைய பராமரிப்பு மேம்படுத்தி வரக்கூடிய தவறுகளை கண்டறிய முடிகிறது. இதனால் தேவையில்லாத நேரத்தை குறைக்க முடிகிறது.

விவசாயம்: செயற்கைக்கோள்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்றின் வேகம் மற்றும் சூரிய கதிர்வீச்சு போன்ற விவரங்களை AI தொழில்நுட்பம் பயன்படுத்தி வானிலையை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு பயன்படுகிறது. அத்துடன் விவசாயின் நிலத்தன்மையை கண்காணிக்கின்றன. அத்துடன் நோய்கள் அல்லது பூச்சிகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளின் விவரங்களையும் மதிப்பிட பயன்படுகிறது.

இது போன்ற இன்னும் எத்தனையோ விஷயங்களுக்கு இந்த டெக்னாலஜி தான் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அதனால் தான் இப்ப இருக்கிற மாணவர்கள் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கூடத்திலேயே அவர்களுக்கு இது சம்பந்தமான தனி புத்தகம் வழங்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த படிப்பை படித்து முடித்து விட்டால் வேலை நிச்சயம் உண்டு. அத்துடன் உலகத்தைப் பற்றி அனைத்து விஷயங்களையும் கரைத்துக் குடித்து விடலாம் என்று சொல்வதற்கு ஏற்ப AI டெக்னாலஜி பயனுள்ளதாக அமைந்து வருகிறது.

- Advertisement -