வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

காசு வாரி கொடுத்தா ஓகே, ஜெயம் ரவின்னா கசக்குதா.. தூக்கிவிட்டவரை நன்றி மறந்த நயன்தாரா

Nayanthara – Iraivan movie: எந்த இடம் போனாலும், வந்த தடம் மறக்கக் கூடாது என பொதுவாக ஒரு பழமொழி சொல்வது உண்டு. அது இப்போது நயன்தாராவுக்கு தான் கரெக்டாக இருக்கும். நயன்தாரா இப்போது எந்த மொழியில் சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து, டாப் ஸ்டார் ஆக இருந்தாலும், அவருக்கு அதிக ஆதரவு கொடுத்து, வளர்ச்சிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது தமிழ் சினிமா தான்.

மற்ற மொழி நடிகர்களை ஒப்பிடும்போது, தமிழ் சினிமா நடிகர்கள் நயன்தாராவுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்து, அவருக்கு மிகப்பெரிய சப்போர்ட் ஆக இருந்திருக்கிறார்கள். நயன்தாரா ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்த பின் சினிமாவில் ஜெயிக்க முயற்சி செய்த போதெல்லாம் அவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது தமிழ் சினிமா மட்டும் தான். இப்படிப்பட்ட தமிழ் சினிமாவை இப்போது மறந்து சுற்றுகிறார் லேடி சூப்பர் ஸ்டார்.

Also Read:என் படம் பாக்க குழந்தைகளோடு வராதீங்க! ஏ சர்டிபிகேட் வாங்கிட்டு சப்ப கட்டு கட்டும் ஜெயம் ரவி

நயன்தாராவுக்கு எப்போதுமே பாலிவுட் சினிமா மீது ஒரு கண் இருந்தது. அதற்கு ஏற்றது போல் ஜவான் பட வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் எப்படியாவது பாலிவுட் நடிகையாகி விட வேண்டும் என்பதுதான் இப்போது அவருடைய மிகப்பெரிய கனவாக இருக்கிறது. ஜவான் படத்திற்கு பிறகு அவர் பாலிவுட் நடிகைகளில் ஒருவராக ஆகிவிட்டார் என்பதற்கு அனில் அம்பானி வீடு கணேஷ் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு சென்றதே ஒரு சாட்சி தான்.

தமிழிலிருந்து ஒரு நடிகை இந்தி சினிமா உலகிற்கு சென்று வெற்றி பெற்றால் அது ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்குமே பெருமை தான். ஆனால் எங்கு சென்றாலும் தன்னை வளர்த்த இடத்தை மறந்து விடக்கூடாது. சமீபத்தில் நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கியது எல்லோருக்குமே தெரியும். அதிலும் ஜவான் படத்தின் சிறப்பு பிரமோஷனுக்ககாகவே அவர் தொடங்கியது போல தான் தெரிந்தது.

Also Read:சீரியல் சைக்கோவை மிஞ்சும், சந்தோசத்திற்காக கொல செய்யும் மிருகம்.. பதற வைக்கும் இறைவன் ஸ்னீக் பீக்

பொதுவாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய ப்ரோமோஷன்களை செய்வது உண்டு. அப்படித்தான் நயன்தாராவும் செய்திருக்கிறார் என்று அப்போது நெட்டிசன்கள் சைலன்டாக விட்டுவிட்டார்கள். நயன்தாராவுக்கு இப்போது கிட்டத்தட்ட ஆறு மில்லியன் பாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள். ஜவான் படத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு ரிலீசுக்கு காத்திருக்கும் படம் ஜெயம் ரவி நடித்த இறைவன் தான்.

இப்படி இருக்கும்போது நயன்தாரா இதுவரை இந்த படத்தை பற்றி எந்த ஒரு பிரமோசனையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்யவில்லை. நயன்தாராவுக்கு தனி ஒருவன் போன்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர்தான் ஜெயம் ரவி. ஷாருக்கான் படத்தை பிரமோஷன் செய்யும் நயன்தாரா இந்த படத்தை ஏன் புறக்கணிக்கிறார் இந்த படத்திற்கும் காசு வாங்கி இருப்பார் இல்லையா என நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Also Read:பல வருடம் கிடப்பில் போட்ட படத்தை தூசி தட்டிய ஜெயம் ரவி.. எல்லாம் இறைவன் கொடுக்கிற தைரியம்

- Advertisement -

Trending News