திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

என் படம் பாக்க குழந்தைகளோடு வராதீங்க! ஏ சர்டிபிகேட் வாங்கிட்டு சப்ப கட்டு கட்டும் ஜெயம் ரவி

Jayam Ravi – Iraivan movie: ஜெயம் ரவி, நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இறைவன் படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் அகமது இயக்கியிருக்கிறார். ராட்சசன், போர் தொழில் படங்களை தொடர்ந்து அதே ஜானரில் எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இது. தொடர் கொலைகளை செய்து வரும் சைக்கோ கில்லரை கண்டுபிடிக்கும் திரை கதையாக இது அமைந்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஆர்வத்தை தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லரும் ஏற்படுத்தி விட்டது. மேலும் இறைவன் படத்திற்கு தணிக்கை குழுவால் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜெயம் ரவியின் ஆதி பகவன் திரைப்படத்திற்கு பிறகு இதற்கு தான் ஏ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.

Also Read:இறைவனைப் பார்த்து மிரண்ட சென்சார் போர்டு.. முதன்முறையாக ஜெயம் ரவி படத்துக்கு கிடைத்த சர்டிபிகேட்

நடிகர் ஜெயம் ரவியின் படத்திற்கு எப்போதுமே ஃபேமிலி ஆடியன்ஸுகள் அதிகம். அப்படி இருக்கும் பொழுது இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது எல்லோருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. இன்று ரிலீசான இறைவன் படத்தின் டிரைலரை பார்த்த பிறகு தான் இந்த படத்திற்கு எதற்காக ஏ சர்டிபிக்கேட் கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கிறது. மேலும் இது பற்றி ஜெயம் ரவியும் விளக்கியிருக்கிறார்.

தான் எப்பொழுதுமே ஃபேமிலி ஆடியன்ஸ்கள் பார்க்கும் வகையில் தான் படங்களை தேர்வு செய்வதாகவும், ஆனால் இறைவன் படத்தை மட்டும் குழந்தைகளோடு சேர்ந்து வந்து பார்க்க வேண்டாம் எனவும், இதன் பிறகு நடிக்கும் எல்லா படங்களுமே குழந்தைகள் பார்க்கும் வகையில் தேர்வு செய்து நடிக்க இருப்பதாகவும் ஜெயம் ரவி சொல்லி இருக்கிறார்.

Also Read:வரிசை கட்டி நிற்கும் ஜெயம் ரவியின் 5 படங்கள்.. பொன்னியின் செல்வனுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்

இறைவன் படத்தை பொறுத்த வரைக்கும் சந்தோஷத்திற்காக கொலை செய்யும் சைக்கோ கில்லரை கண்டுபிடிப்பது தான் கதை. இதில் அந்தக் கில்லர் கொலை செய்யும் விதமும் அந்த பிணங்களை காட்சிப்படுத்தும் விதமும் கொடூரமாக காட்சியாக பட்டிருப்பதால் தான் தணிக்கை குழு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது. மேலும் அதில் இருக்கும் ஒரு சில கெட்ட வார்த்தைகளையும் நீக்க சொல்லி இருக்கிறது.

இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது அந்த கொடூரமான காட்சிகளை நீக்கிவிட்டால் படத்தில் சுவாரஸ்யம் இருக்காது என்பது நன்றாக தெரிகிறது. அதனால் தான் ஏ சர்டிபிகேட் கிடைத்தாலும் பரவாயில்லை, படத்தின் கதையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் துணிந்து பட குழு இதை செய்திருக்கிறது. ஜெயம் ரவி தனது ரசிகர்களுக்காக இப்படி முட்டுக் கொடுத்து பேசியிருக்கிறார்.

Also Read:அடுத்த ராயப்பனை மிஞ்சும் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி.. மிரட்டும் சைரன் பட போஸ்டர்

- Advertisement -

Trending News