சீரியல் சைக்கோவை மிஞ்சும், சந்தோசத்திற்காக கொல செய்யும் மிருகம்.. பதற வைக்கும் இறைவன் ஸ்னீக் பீக்

Iraivan Sneak Peek: கொல நடுங்க வைக்கும் திரில்லர் கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஆதரவு உண்டு. அதனாலேயே அண்மைக்காலமாக உயிரை பதற வைக்கும் படியான பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவியின் இறைவனும் மிரட்டுவதற்கு தயாராகியுள்ளது.

ஏற்கனவே இதன் ட்ரெய்லர் வெளிவந்து எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஸ்னீக் பீக் காட்சிகளும் அதிர வைத்திருக்கிறது. அதன்படி இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து நடக்கும் பெண்களின் மரணம் பற்றி தான் காட்டப்படுகிறது.

Also read: பல வருடம் கிடப்பில் போட்ட படத்தை தூசி தட்டிய ஜெயம் ரவி.. எல்லாம் இறைவன் கொடுக்கிற தைரியம்

மிகவும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான பெண்களின் கொலை வழக்கை ஜெயம் ரவி கண்டறிய வருகிறார். ஆனால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் சவால் விடும் வகையில் கொலையாளியின் ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் சந்தோஷத்திற்காக கொலை செய்யும் அந்த சைக்கோ யார் என்று தெரியாமல் ஜெயம் ரவியும் குழப்பமடைகிறார். இப்படியாக தன்னை கடவுளாக நினைத்துக் கொண்டு கொடூரத்தை அரங்கேற்றி வரும் அந்த வில்லன் ராட்சசன் படத்தையும் நினைவூட்டுகிறார்.

Also read: சைக்கோ தனமான மிருகங்களை வேட்டையாடும் ஜெயம் ரவி.. மிரள விட்ட இறைவன் பட ட்ரைலர்

அதிலும் பின்னணி இசை படு மிரட்டலாக இருப்பதை பார்த்தால் படம் பார்ப்பவர்கள் நிச்சயம் நடுநடுங்கி தான் போவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதை பார்க்கும் போது இது குழந்தைகளுக்கான படமாக இருக்காது என்பதை காட்டுகிறது.

ஏற்கனவே படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இந்த வீடியோ காட்சிகளும் மிரள வைத்திருக்கிறது. இப்படியாக ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டி இருக்கும் இறைவன் ஸ்னீக் பீக் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -