இரவில் தூங்கும் பொழுது ஏற்படும் நரம்பு பிரச்சனை.. உயிர் போகும் அளவில் வலி, காரணம் கேட்டு சரி செஞ்சுக்கோங்க

Nerves problem: நேரம் காலம் பார்க்காமல் ஒவ்வொருவரும் நம்முடைய வெற்றிப் பாதையை தொடுவதற்காக அயராமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் நமக்கென்று ஒரு நேரத்தை செலவழிக்கிறோம் என்றால் அது நாம் தூங்கக்கூடிய நேரம் தான். எல்லா அசதிகளையும் நீக்கும் வகையில் நாம் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று கால் நரம்பு பிரச்சினையால் துடிதுடித்துப் போய் விடுவோம்.

அதாவது நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று கால் இழுப்பது போல் நரம்பு பிடித்து உயிரை போகும் அளவிற்கு ஒரு வலி ஏற்பட்டு விடும். அந்த வலி வந்து விட்டால் நம்மளுடைய தூக்கமே போய்விடும் என்று சொல்வதற்கு ஏற்ப அந்தக் காலை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அப்படியே மேலிருந்து கீழே தடவி விடுவோம். ஆனாலும் குறைந்தது ஒரு பத்து நிமிஷம் ஆவது அந்த வலி இருந்துவிட்டு தான் போகும்.

திடீரென்று ஏற்படும் கால் வலி

இது ஒன்னும் சாதாரண வலி அல்ல, சொல்ல முடியாத அளவிற்கு தீராத ஒரு வலியை கொடுக்கும். இந்த வலி மற்ற நேரங்களில் எல்லாம் ஏற்படாது. இரவு நல்லா அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று கால் டக்குனு புடிச்சிக்கிட்டு ஒரு வலி வந்து விடும். நம்மளும் காலை மடக்கி பார்ப்போம் நீட்டி பார்ப்போம் எழுந்து பார்ப்போம் நடந்து பாப்போம் ஒன்னும் பண்ண முடியாது. என்ன பண்ணாலும் அந்த வலி வந்துட்டு தான் போகும். அதனால் இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு என்ன ஒரு தீர்வு என்று பார்ப்போம்.

வருவதற்கான காரணம் நம் அதிகமாக தண்ணீர் குடிக்காததால், நம்ம திடீர்னு அதிகமா மாடிப்படி ஏறி வருவது, அதிக வேலையை பார்ப்பது, தொடர்ச்சியாக நின்று கொண்டிருப்பது, ரொம்ப தூரம் நடப்பது இதனால் கூட அடிக்கடி வலி ஏற்படும். அத்துடன் உடற்பயிற்சி எதுவும் எடுக்காமல் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் இருந்து வேலை பார்த்தோம் என்றால் அதனால் கூட நரம்பு வலி பிரச்சனை ஏற்படும்.

அதே மாதிரி உண்ணும் உணவுகளில் அதிக சத்துக்கள் நிறைந்த புரோட்டின், கார்போஹைட்ரேட் போன்ற சத்தான உணவுப் பொருட்களை எடுக்க வேண்டும். தொடர்ச்சியாக இதை பின்பற்றி வந்தால் இந்த வலியில் இருந்து நமக்கு விடுதலை கிடைத்து விடும். மேலும் திடீரென்று வலி வந்தால் என்ன பண்ணலாம் என்று தற்போது பார்க்கலாம்.

அதாவது வலி ஏற்பட்ட பொழுது காலை நீட்டி காலில் உள்ள விரல்களை நம் கைகளால் இறுக்கிப்பிடித்து கொஞ்ச நேரம் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நம் காலை மடக்காமல் நேராக நீட்டி வைத்திருக்க வேண்டும். அதே மாதிரி தொடையிலும் இதே பிரச்சினை ஏற்பட்டு விட்டால் ஒரு பெட்ஷீட் வைத்து காலில் உள்ள பாதத்தை இறுக்கிப்பிடித்து நீட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். காலில் உள்ள மூட்டுகளை மடக்காமல் ஒரு 15 செகண்ட்ஸ் வரை வைத்துக் கொண்டால் காலில் உள்ள நரம்பு பிரச்சனை குறைந்து விடும். இதெல்லாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மிகவும் அவசியமானது.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில டிப்ஸ்கள்

Next Story

- Advertisement -