வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

செவ்வாழைப் பழத்தின் முத்தான 10 மருத்துவ குணங்கள்.. குழந்தைகளை சாப்பிட வைக்கும் எளிய முறை

Red banana Benefits: எளிதாக கிடைக்கக்கூடிய கம்மியான பணத்தில் அதிக சத்துக்களை கொடுக்கக்கூடிய எத்தனையோ உணவுகள் இருந்தாலும், அதையெல்லாம் விட்டுவிட்டு அதிகமாக காசு கொடுத்து பழங்களை வாங்கி சாப்பிடுவது தான் இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது. ஆனால் ஒரு வாழைப்பழத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்றால் அந்த சிறப்பு செவ்வாழைப்பழத்துக்கு உண்டு.

இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால் கண் நோய்களை குணமாக்கும். உயர்தர பொட்டாசியம் அதில் இருக்கிறது, சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. அத்துடன் 50% அளவில் நார்ச்சத்து இருக்கிறது. இருதய நோய் மற்றும் புற்றுநோயின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. செவ்வாழை பழத்தின் ஊட்டச்சத்துக்கள் 99grms அளவிற்கு நன்மைகள் இருக்கிறது.

செவ்வாழைப் பழத்தில் இருக்கும் நன்மைகள்

தினமும் இரவு உணவை முடித்த பிறகு ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும். அதனால் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறு, சீராக்கும் சக்தி கிடைக்கும். வயதானவர்கள் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்கள் தினசரி உணவில் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் 21 நாட்களுக்குள் கண் பார்வை கொஞ்சம் தெளிவடையும்.

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்: செவ்வாழை உடலுக்கு ஆற்றலை வழங்கி உடலின் சுறுசுறுப்பை அதிகரித்து, சோர்வை தடுத்து எப்பொழுதும் உடலை புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

அத்துடன் எடையை குறைக்க நினைப்பவர்கள் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள்களை தவிர்க்க வேண்டும். அதனால் செவ்வாழையில் மற்ற பல வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையை குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால் பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.

கண் எரிச்சலால் ஏற்படும் தெளிவற்ற பார்வையாளர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாக இருக்கும். அந்த வகையில் கண்பார்வை கொஞ்சம் குறைய ஆரம்பித்தவுடன் தினசரி செவ்வாழை பலத்தை சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவாக கிடைக்கும்.

குழந்தை இல்லாத தம்பதிகள் தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்தி வந்தால் தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அத்துடன் சருமத்தில் ஏற்படும் சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு சாப்பிட்டு வர சரும நோய் குணமடையும்.

இதனை தொடர்ந்து தொற்று நோய் கிருமிகளை கொள்ளும் அரிய சக்தி செவ்வாழைப்பழத்தில் இருக்கிறது. நரம்புத்தளர்ச்சி குறைபாட்டால் சோர்வடையாமல் இருப்பதற்கு தினசரி ஒரு செவ்வாழைப்பாளையம் சாப்பிட்டு வர 44 நாட்களுக்குள் நரம்புகள் பலம் தரும். அத்துடன் ஆண்மை தன்மையும் சீரடையும்.

தினமும் நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனென்றால் அதில் இயற்கையாக ஆன்டாசிட் தன்னை இருக்கிறது. பல் வலி பல்லா செவி போன்ற பல வகையான பல வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும் மேலும் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு சாப்பிட்டுக்கு பின் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண்நோய் குணமாகும்.

செவ்வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கொடுப்பது எப்படி: பேன் கேக், வாழைப்பழ பிரெட், பேக்டு பனானா சிப்ஸ், வாழைப்பழ குக்கீஸ், பனானா மஃபின்ஸ், பனானா ஐஸ் கிரீம், புத்துணர்ச்சியை கொடுக்கும் பனானா மற்றும் தேங்காய் பால் இப்படி விதவிதமான வித்தியாசமான பொருட்களை சேர்த்து பனானாவை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் சிறந்தது.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் டிப்ஸ்கள்

- Advertisement -

Trending News