வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மீண்டும் சூடு படுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுப் பொருட்கள்.. விலை கொடுத்து நோய்களை வாங்கும் பேராபத்து

8 food items that should never be reheated: ஒரு காலத்தில் தேவைக்கு சமைத்து சாப்பிட்டு உடல்நிலை சீராக வைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது நாகரீக வாழ்க்கை என்ற பெயரில் நவீன வாழ்க்கையில் நாம் தேடி போய் விலை கொடுத்து நோய்களை வாங்கி பேராபத்தில் சிக்கி தவிக்கிறோம். அந்த வகையில் பிரிட்ஜ், மைக்ரோவேவ் போன்ற அதிநவீன சாதனங்கள் இருப்பதால் தேவைக்கு அதிகமான சாப்பாடுகளை செய்து வைத்து அதில் ஸ்டோர் பண்ணி விடுகிறோம்.

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

பிறகு நமக்கு நேரம் இல்லாத காரணத்தினால் அதை எடுத்து மீண்டும் சூடு படுத்தி சாப்பிட்டு நாம் வயிற்றை நிரப்பி விடுகிறோம். ஆனால் அதன் மூலம் எவ்வளவு ஆபத்துகள் இருக்கிறது என்று நமக்குத் தெரிந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சோம்பேறித்தனத்தால் பல ஆபத்துக்களை நோக்கி பயணித்து வருகிறோம். அதிலும் சில பொருள்களை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடவே கூடாது என்று மருத்துவர்கள் லிஸ்ட் போட்டிருக்கிறார்கள். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

கீரை: கீரையில் அதிக அளவு இரும்பு சத்து மற்றும் நைட்ரேட் இருக்கிறது. அதனால் வாரத்திற்கு இரு முறை சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு ரொம்பவே வலிமையை ஏற்படுத்தும். முக்கியமாக குழந்தைகளுக்கு இது கொடுப்பது ரொம்பவே நல்லது என்று கீரைக்கு மிகப்பெரிய மகத்துவம் இருக்கிறது. ஆனால் அதைக் கெடுக்கும் விதமாக தற்போது இந்த கீரையை அதிகமாக சமைத்த பின்பு மீதம் இருக்கும் கீரையை ஃப்ரிட்ஜில் வைத்து விடுகிறார்கள். பிறகு தேவைப்படும் பொழுது அதை எடுத்து சூடு படுத்தி சாப்பிடுகிறார்கள். இதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதனால் கீரையை சூடு படுத்தி சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

அரிசி சாப்பாடு: தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் ஒரு உணவு அரிசி சாப்பாடு. ஆனால் அது மீதமாக இருந்தால் பழைய காலத்தின் படி தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு ஊற வைத்து சாப்பிட வேண்டும். அதை விட்டுவிட்டு மீதமுள்ள உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சூடு படுத்தி சாப்பிடக்கூடாது. ஏனென்றால் சாதத்தை சூடு படுத்தி சாப்பிடும் பொழுது நச்சுத்தன்மை அதிகமாகி ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சிக்கன்: அசைவ பொருள்களில் அதிக புரோட்டின் இருப்பது கோழி இறைச்சியில் தான். பொதுவாக புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருள் எடுத்துக் கொண்டால் செரிமானமாக நேரம் அதிகமாக எடுத்துக் கொள்ளும். அந்த வகையில் சிக்கனை சூடு படுத்தி சாப்பிடும் போது அதில் புரதச்சத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதிலும் இரண்டாவது முறை சூடு படுத்தி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு: சில விஷயங்களில் நம்முடைய சோம்பேறித்தனத்தால் பல வியாதிகளுக்கு ஆளாகி விடுகிறோம். அதில் ஒன்றுதான் இந்த உருளைக்கிழங்கு. அதாவது இந்த உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்தமான உணவு என்றே சொல்லலாம். அதனால் பலரும் இதை அதிகமாக வேகவைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுகிறார்கள். தேவைப்படும்போது அதை சூடு படுத்தி சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் உருளைக்கிழங்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக நச்சுத்தன்மையாக மாறி வாந்தி, குமட்டல், உடல் நலப் பாதிப்பு என பல பிரச்சனைகளுக்கு ஆளாகி விடுவோம்.

சமையல் எண்ணெய்: எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும் அதை திரும்பத் திரும்ப சூடு படுத்தி சாப்பிடுவது பேராபத்தை உண்டாக்கும். காரணம் இதை மறுபடி சூடு படுத்து சாப்பிடுவதால் இதனுடைய அடர்த்தி அதிகரித்து புற்றுநோய், இதய நோய்கள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.

முட்டை: முட்டையில் அதிக புரோட்டின் இருப்பதால் நன்றாக வேகவைத்த அல்லது வருத்த முட்டையை மீண்டும் சூடு படுத்தினால் அது விஷயமாக மாறிவிடும். இதனால் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். அதனால் எந்த காரணத்தை கொண்டும் முட்டையை ஒரு முறைக்கு மேல் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது.

பீட்ரூட்: பீட்ரூட்டிலும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸ் இருக்கிறது. அதனால் இந்த உணவையும் நாம் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக் கூடாது.

காளான்: இந்த உணவைப் பொறுத்தவரை எப்பொழுது சமைக்கிறோமோ அந்த நேரத்தில் சாப்பிடுவது மிக சிறந்தது. ஏனென்றால் காளானில் அதிக புரோட்டின் இருப்பதால் இரண்டாம் முறை சூடு படுத்தி சாப்பிடும் போது அது விஷமாக மாறி செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகளை உண்டாக்கும். அதனால் முற்றிலும் இதனை இரண்டாவது முறையாக சூடு படுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் அந்த காலத்தில் மீன் குழம்பு, காரக்குழம்பு, வத்தல் குழம்பு போன்ற உணவுகளை மறுநாள் சூடு படுத்தி சாப்பிடுவார்கள். ஆனால் இதை வெளியில் வைத்து சூடு படுத்தி சாப்பிட்டால் மட்டுமே தான் நல்லது. ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணி சாப்பிடுவது எந்த பொருள்களாக இருந்தாலும் தீங்கு தான் விளைவிக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில குறிப்புகள்

- Advertisement -

Trending News