புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஜெயிலர் வெற்றிக்கு பின் படு பயங்கரமாக செயல்படும் நெல்சன்.. வரிசை கட்டி நிற்கும் 3 படங்கள்

Nelson Upcoming Movies: நெல்சன் கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கிட்டத்தட்ட 650 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் நெல்சன் இதற்கு அடுத்ததாக இப்போது மூன்று படங்களை இயக்க இருக்கிறார். அதாவது நெல்சன், விஜய் கூட்டணியில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த சூழலில் ரஜினி படத்தை நெல்சன் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் சூப்பர் ஸ்டார் நம்பி தன்னுடைய ஜெயிலர் படத்தை கொடுத்திருந்தார். அதற்கு கை மேல் பலனாக பிளாக்பஸ்டர் ஹிட் படமாக ஜெயிலரை நெல்சன் கொடுத்திருந்தார். இப்படம் வசூலை வாரி குவித்த நிலையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் நெல்சன் மற்றும் ரஜினிக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி இருந்தார்.

இந்நிலையில் இப்போது அடுத்ததாக நெல்சன் தன்னுடைய முதல் படமான கோலமாவு கோகிலா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். நயன்தாரா மற்றும் யோகி பாபு கூட்டணியில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக இந்த பணியில் தான் நெல்சன் இறங்க இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து கமல் இப்போது தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் நிறைய படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் போன்ற நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் கமல் அடுத்ததாக தனுஷின் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை நெல்சன் தான் இயக்க உள்ளார்.

முதல்முறையாக தனுஷ் மற்றும் நெல்சன் காம்போவில் ஒரு படம் உருவாக உள்ளது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடைசியாக எல்லோருமே காத்திருக்கும் ஜெயிலர் 2 படத்தையும் விரைவில் நெல்சன் எடுக்க இருக்கிறார். முதல் பாகம் கிளைமாக்ஸ் காட்சியிலேயே இரண்டாம் பாதி வருவதை நெல்சன் உறுதிப்படுத்தி இருந்தார்.

அதன்படி ஜெயிலர் 2 படமும் உருவாக இருக்கிறது. இப்போது ரஜினி லால் சலாம் படத்தை முடித்த நிலையில் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த கையோடு அடுத்ததாக ஜெயிலர் 2வில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு நெல்சனின் லைன் அப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

- Advertisement -

Trending News