சும்மா இருந்த நயன்தாராவுக்கு பிள்ளை கொடுத்தாரா விக்னேஷ் சிவன்? இணையத்தில் ரசிகர்கள் செம கலாய்

நயன்தாராவின் சினிமா கேரியர் ஆஹா ஓகோ என்று இருந்தாலும் சொந்த வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. பலபேரின் காதலுக்கு அடிமையாக இருந்த நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனிடம் தஞ்சமடைந்துள்ளார்.

விக்னேஷ் சிவன் ஒரு பெரிய இயக்குனர் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. அந்த அளவுக்கு பெரிய சூப்பர் ஹிட் படங்களையும் அவர் இயக்கியதில்லை. இருந்தாலும் நயன்தாராவின் காதலர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே அவருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமீபகாலமாக நயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் புதிய புதிய சிறிய பட்ஜெட் படங்களை தயாரிப்பது, ஏற்கனவே உருவாகியிருக்கும் சின்ன பட்ஜெட் படங்களை தங்களுடைய பேனரில் வாங்கி வெளியிடுவது போன்ற வேலைகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் அவர்களது முதல் தயாரிப்பாக வெளிவந்த கூழாங்கல் என்ற திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்து வருகிறது. அதில் ஒரு விருதை கையில் வைத்துக்கொண்டு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் புகைப்படம் வெளியிட்டனர்.

ஆனால் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாருமே அந்த விருதை கவனிக்கவில்லை. அதற்கு மாறாக நயன்தாரா மடியில் விக்னேஷ் சிவன் கை வைத்திருந்ததை பார்த்த ரசிகர்கள், ஒருவேளை நயன்தாரா கர்ப்பம் ஆகிவிட்டாரா? என அவர்களது கமெண்ட் பக்கத்தில் கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே இதே போன்று ஒரு புகைப்படத்தில் நயன்தாராவின் வயிறு கொஞ்சம் பெரிதாக இருக்க, அதைப் பார்த்த ரசிகர்கள் எத்தனை மாதம்? என கேட்கத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொண்டால் தான் இந்த கேலி கிண்டல்கள் குறையும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

nayanthara-cinemapettai
nayanthara-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்