திருமணத்திற்காக முன் கண்டிஷன் போட்ட நாகார்ஜுனா.. 30 வருசமா சொன்னபடியே வாழும் அமலா

சினிமா துறையை பொறுத்த வரையிலும் படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின் ரீல் ஜோடிகள் ஆகவே கலக்கி வந்துள்ளனர். ஆனால் ரீல் ஜோடிகளாக இருந்து பிற்காலத்தில் ரியல் ஜோடிகளாக மாறி இன்றளவும் நட்சத்திர தம்பதிகளாக நாகர்ஜுனா, அமலா ஜோடி குடும்பத்தில் மட்டுமல்லாமல் திரைத் துறையிலும் ஜொலித்து வருகின்றனர்

தெலுங்கு சினிமாவில் வாரிசு குடும்ப நடிகர் ஆன நாகார்ஜுனா திரைத்துறையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். தெலுங்கு திரைதுறை உலகில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராகவும் உள்ளார். இவர் தமிழ் திரையுலகில் மாஸ், டான், தோழா, பயணம், ருத்ரன், ரட்சகன் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட தமிழ் ரசிகர்களுக்கும் பரீட்சியமானவராகவே இருந்து வருகிறார்.

Also Read: சமந்தாவை தவிர்க்கும் நாகார்ஜுனா.. பூகம்பமாக வெடிக்கும் பிரச்சனை.!

1997 ஆம் ஆண்டு இயக்குனர் பிரவீன் காந்த் இயக்கத்தில் நாகார்ஜுனா சுஷ்மிதா சென் நடிப்பில் வெளியான ரட்சகன் காதல் கலந்த ஆக்சன் திரைப்படம் ஆகும். அதிலும் படத்தில் வரும் “சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நடிகை அமலா தமிழ் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் தனது நடிப்பின் மூலம் திரைதுறை உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் கணம், வாசலிலே ஒரு வெண்ணிலா, மௌனம் சம்மதம், இதயகீதம், மாப்பிள்ளை வெற்றி விழா, நாளைய மனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Also read:சிவகார்த்திகேயனை முந்திய கார்த்தி.. பிரின்ஸ், சர்தார் 4 நாள் வசூல் இதுதான்

தெலுங்கு சினிமாவின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த நடிகர் நாகார்ஜுனா நடிகை அமலாவை 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகள் ஆவர். இதனைத் தொடர்ந்து நாகர்ஜுனா அமலாவிடம் திருமணத்திற்கு பிறகு நீ எப்பொழுதும் குண்டாக கூடாது என்றும் அப்படி குண்டாகினால் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதற்கு வாய்ப்பு உண்டு என்று முன்கூட்டியே கண்டிஷன் போட்டுள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் நீ ஒல்லியாக தான் இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதனை ஏற்று அமலாவும் திருமணத்திற்கு முன் நாகர்ஜுனாவிற்கு சத்தியம் செய்தது போல் இன்றளவும் தனது உடல் எடையை ஸ்லிம்மாகவே மெயின்டைன் செய்து வருகிறார்.

Also read:சிவகார்த்திகேயனை முந்திய கார்த்தி.. பிரின்ஸ், சர்தார் 4 நாள் வசூல் இதுதான்

- Advertisement -spot_img

Trending News