34 வயது நடிகையின் வயிற்றில் பிறக்க ஆசைப்படும் மிஸ்கின்.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா?

Mysskin : இயக்குனர் மிஸ்கின் வித்தியாசமான கதைகள் மூலம் தொடர்ந்து படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் உருவான பிசாசு 2 திரைப்படம் தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. இப்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

அதன்படி டெவில் என்ற படத்திற்கு இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்டார். எப்போதுமே மிஸ்கின் பேசுவது சர்ச்சையாகும் நிலையில் இந்த விழா மேடையில் பேசியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அதாவது டெவில் படத்தில் நடிகை பூர்ணா நடித்துள்ளதால் இந்த விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில் பூர்ணா பற்றி மிஸ்கின் பேசும்போது என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒருவர் இவர் தான். மேலும் அவளுடைய வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க ஆசைப்படுகிறேன்.

Also Read : மிஸ்கின் கேட்ட கேள்வியால் கடுப்பான மணிரத்தினம்.. எந்த காலத்திலும் இவரின் மூஞ்சில முழிக்கவே மாட்டேன்னு போயிட்டாராம்

ஏனென்றால் என்னை ஒரு தாய் போல பூர்ணா பார்த்துக் கொள்வார். அவர் ஒரு சிறந்த நடிகை, தன்னுடைய வாழ்நாள் இருக்கும் வரை சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. மேலும் என்னுடைய படங்களில் எப்போதுமே பூர்ணா நடிப்பார் என்று மிஸ்கின் கூறி இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் பூர்ணா மீது மிஸ்கின் இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாரா. தன்னுடைய அம்மாவாக நினைக்கும் அளவுக்கு மிகுந்த நல்ல குணங்கள் பூர்ணாவிடம் இருப்பதாக மிஸ்கின் கூறியுள்ளார். மேலும் பூர்ணா இப்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

Also Read : இமேஜ் பார்க்காமல் வாயை புண்ணாக்கி கொண்ட 5 பிரபலங்கள்.. விஷாலை பொறுக்கியாக்கிய மிஸ்கின்

- Advertisement -spot_img

Trending News