மசூதிக்கு கீழ் புதைந்திருந்த ராமர் கோவில்.. கண்டுபிடித்த முஸ்லீம்

Ayodhya – Ramar kovil : உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் நேற்று ராமர் கோயில் குடமுழுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 500 வருடங்களாக போய்க்கொண்டிருந்த இந்த பிரச்சனையில் ஒரு வழியாக தீர்வு கிடைத்து ராமர் கோயில் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மசூதிக்கு கீழ் ராமர் சிலை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது 1526 ஆம் ஆண்டு முகலாய மன்னர் பாபர் இந்தியா மீது படையெடுத்து இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார். இதனால் பாபரின் புகழை உலகம் அறிய செய்ய வேண்டும் என்பதற்காக அவருக்கு மசூதி கட்ட முடிவெடுத்தனர். மேலும் பாபரின் தளபதி மிர் பாகியலால் பாபர் மசூதி கட்டப்பட்டது.

அந்த இடம் ஒதுக்கப்பட்ட போது ராமர் பிறந்த இடம் இது என இந்து மக்கள் கூறிவந்துள்ளனர். இதனால் மசூதிக்கு வெளிவளாகத்தில் இந்துக்கள் வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சுதந்திரம் கிடைத்து 1949 ஆம் ஆண்டு மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது மசூதிக்குள் கடத்தல் நடப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறது.

Also Read : அயோத்திக்கு மோடி கூப்பிட்டும் தெனாவட்டு காட்டிய 6 பிரபலங்கள்.. வேலை கெடக்குதுன்னு விவசாயம் செய்த தல தோனி

மற்றொருபுறம் மசூதிக்கு உள்ளே ராமர் சிலை தோன்றியிருப்பதாக இந்துக்கள் கூறுகின்றனர். மேலும் இந்து மற்றும் முஸ்லிம் இடையே பிரச்சனை ஏற்பட மசூதியின் நுழைவாயில் பூட்டப்படுகிறது. ஒரு பிரச்சனை தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும் நிலையில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி வன்முறை கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்படுகிறது.

இந்நிலையில் தொல்பொருள் ஆராய்ச்சி மசூதியை ஆய்வு செய்தபோது அந்த குழுவில் ஒருவர் தான் கேகே முகமது. அந்தச் சமயத்தில் மசூதியின் சுவரில் 14 இந்து கோயிலின் தூண்கள் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வாலி மற்றும் பத்து தலை ராவணனையும் வதம் செய்த விஷ்ணுவுக்கு இந்த கோயில் நிர்ணயிக்கப்பட்டதாக கல்வெட்டும் இருந்திருக்கிறது.

மேலும் இங்கு ஏற்கனவே கோயில் இருந்ததை அடையாளப்படுத்தும் விதமாக 263 கோயில் சார்ந்த சிலைகள், தூண்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியில் 131 பேர் கொண்ட குழு இருந்த நிலையில் கேகே முகமதுவை சேர்ந்து 52 முஸ்லிம் இருந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆராய்ச்சி பொய்யானது என அப்போது தகவல் பரவி இந்து முஸ்லீம் பிரச்சனையாக மாறி உள்ளது.

மேலும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மசூதி கட்டுவதற்காக தன்னிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. இதை அடுத்தது நரேந்திர மோடி 2020 ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடந்துள்ளது. இன்று பொதுமக்களுக்கும் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

Also Read : ரஜினியை விட உலக நாயகன் எவ்வளவோ மேல்.. 30 வருஷத்துக்கு முன்னாடி அயோத்தி பற்றி கமல் கூறிய கருத்து

- Advertisement -spot_img

Trending News