புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

ரஜினியை விட உலக நாயகன் எவ்வளவோ மேல்.. 30 வருஷத்துக்கு முன்னாடி அயோத்தி பற்றி கமல் கூறிய கருத்து

Actor Kamal’s comment about Ayodhya 30 years ago: நேற்று உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாலராமர் கோயில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடந்தது. 500 ஆண்டு கால பிரச்சனை தீர்ந்ததாக ரஜினி, இது குறித்து கருத்து தெரிவித்தார். இவரது கருத்துக்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் ராமர் கோயில் பற்றி உலகநாயகன் கமலஹாசன் என்னதான் சொல்லி இருப்பார் என்று தேடிப் பார்த்தால், உண்மையில் அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதை காட்டிவிட்டார். தற்போது செய்தியாளர் ராமர் கோயில் பற்றி கமலிடம் கருத்து கேட்டபோது, ‘30 ஆண்டுகளுக்கு முன்பே என் கருத்தை கூறிவிட்டேன். அதே கருத்தில் தான் தற்போதும் நிற்கிறேன்’ என்று தெளிவாக இன்றும் கூறுகிறார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு கமலஹாசன் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. பாபர் மசூதி இடித்த சமயத்தில் யதேச்சையாக கமலும் டெல்லியில் தான் இருந்திருக்கிறார். விஷயத்தை கேள்விப்பட்டதும் உடனடியாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து தமிழ் திரையுலகம் சார்பாக எதிர்ப்பை பதிவு செய்தார்.

Also Read: அயோத்தி சென்ற சூப்பர் ஸ்டார் பேசுனதுல எனக்கு விமர்சனம் இருக்கு.. பரபரப்பான பேட்டியை அளித்த பா ரஞ்சித்

30 வருஷமாக ஒரே கருத்தில் நிற்கும் கமல்

பாபர் மசூதி இடிப்பதற்கு எதிராக சினிமா உலகில் இருந்து முதல் முதலில் எழுந்த எதிர்க்குரல் கமலுடையது. இத்தனைக்கும் கமல் ஒரு ஐயர். அவருக்கே தெரிந்திருக்கிறது ஒரு கோயிலை இடித்து இன்னொரு கோயில் கட்டுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று. கமல் 30 வருடத்திற்கு முன் அளித்த பேட்டியில், ‘ஒரு நடிகராக இதைப் பற்றி பேச கூடாது என சொல்கிறார்கள். ஆனால் நானும் இந்த நாட்டில் தான் இருக்கிறேன், அதனால் கண்டிப்பாக பேசுவேன்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதெல்லாம் அரசியல்வாதிகள் செய்யக்கூடிய சூழ்ச்சி தான். மக்களுடைய மதத்தை வைத்து அரசியல் பண்ணக்கூடாது. மக்கள் நம்புகிற மதத்தை விட்டு அரசியல்வாதிகள் விலகி நிற்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்ய தவறியது தான், எனக்கு மிகுந்த கோபம் வருகிறது.

யாரையுமே மதத்தை வைத்து தவறாக சித்தரிக்காதீர்கள்’ என்று 30 வருடத்திற்கு முன்பு கமல் அளித்த பேட்டியில் தன்னுடைய கருத்தை ஆவேசத்துடன் பதிவிட்டார். இப்போதும் அந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று செய்தியாளர்களிடம் சொன்னார். இந்த விஷயத்தின் மூலம் ரஜினியை விட கமல், ‘புரிதல் உள்ள மனிதன்’ என நிரூபித்துவிட்டார். மதத்தை வைத்து அரசியல் பண்ணக்கூடியவர்களுக்கு ஜால்ரா போடும் ரஜினி, அரசியலுக்கு வராமல் போனது ரொம்பவே நல்லது என்று நெட்டிசன்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெறிக்க விடுகின்றனர்.

Also Read: அயோத்தியில் சச்சின், ரஜினி, அம்பானிக்கு மட்டுமே கிடைத்த கௌரவம்.. ஆவேசமாய் சூப்பர் ஸ்டார் கேட்டு வாங்கிய அனுமதி

- Advertisement -spot_img

Trending News