ஓடிடி-யில் அதிகம் பார்க்கப்பட்ட 4 படங்கள்.. கேஜிஎப் 2 ஓரமா போங்க, மாஸ் காட்டிய விக்ரம்

கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் செய்யாத நிலை ஏற்பட்டதால் டாப் ஹீரோக்களின் படங்களும் கூட ஓடிடி-யில்தான் ரிலீசானது. தற்போது நிலைமை சரியான பிறகும் ஓடிடியில் படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தியேட்டரில் படங்கள் ரிலீஸான சில நாட்களிலேயே ஓடிடிலும் ரிலீசாகி ஹிட் கொடுக்கிறது. அந்த வகையில் 2022ல் அமேசானில் வெளியான தமிழ் படங்களில் டாப் 4 படங்களில் ஒன்றாக விக்ரமின் மகான் இடம் பெற்று மாஸ் காட்டுகிறது.

மகான்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் கலவையாக வெளிவந்த இந்த திரைப்படம், அமேசானில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டது.

Also Read: நடிகர் விக்ரமின் தந்தை இந்த நடிகரா?. இத்தனை நாள் தெரியாம போச்சே!

புஷ்பா: தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தண்ணா நடித்திருந்தார்.

ஐந்து மொழிகளில் வெளியான புஷ்பா படம் 306 கோடி வசூல் செய்துள்ளது. அதன்பிறகு அமேசானிலும் வெளியாகி அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் டாப் 4 லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது.

Also Read: பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி வசூலை தாண்டிய 3 படங்கள்.. அதிரடி காட்டிய ரஜினி

கேஜிஎப் 2: இந்த படத்தின் முதல் பாகமே, இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. தங்க சுரங்கத்திற்காக பொதுமக்களை அடிமைபடுத்தியவர்களை யாஷ் அழிப்பதாக முதல் பாகத்தில் இருந்தது, இரண்டாம் பாகத்தில் அந்த தங்க சுரங்கத்திற்கு அவரே முதலாளியாக இருந்து மாஸ் காட்டினார்.

இந்தப்படம் திரையரங்கில் தாறுமாறாக ஓடி 1200 கோடியை குவித்துடன், அமேசானிலும் வெளியாகி ரசிகர்கள் அதிகம் பார்க்கக்கூடிய படமாக மாறியது.

ராக்கெட்ரி: மாதவன் இயக்கி, நடித்து வெளியான படம் ராக்கெட்ரி. இப்படத்தில் சிம்ரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சூர்யா கேமியோ தோற்றத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இப்படம் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் திரையரங்கில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து, ஓடிடிலும் ரிலீஸாகி பெரும்பாலானவர்களை பார்க்க வைத்தது.

இவ்வாறு 2022ல் வெளியான இந்த நான்கு படங்களும் அமேசானில் ரசிகர்கள் அதிகம் பார்த்த டாப் 4 படங்களாகும். இந்தப் படங்களில் சில திரையரங்குகளிலும் வசூல் வேட்டை ஆடியது குறிப்பிடத்தக்கது.

Also Read: சக்கைபோடு போட்ட 5 பயோபிக் படங்கள்.. சில்க்காய் வாழ்ந்த வித்யா பாலன்